மொபைலில் விளம்பரம் பார்த்தால் பணம் என மோசடி நீதிமன்றத்தில் சரணடைந்த my v3 ads உரிமையாளர் நடந்தது என்ன முழு விவரம்
மொபைலில் விளம்பரம் பார்த்தால் பணம் என மோசடி நீதிமன்றத்தில் சரணடைந்த my v3 ads உரிமையாளர் நடந்தது என்ன முழு விவரம்
MY V3 ADS நிறுவனர் சக்தி ஆனந்தனுக்கு ஜூலை 19 வரை நீதிமன்ற காவல்!ஆன்லைன் செயலியில் விளம்பரம் பார்த்தால் பணம் சம்பாதிக்கலாம் எனக் கூறி பொதுமக்களிடம் முதலீடு பெற்று பல கோடி மோசடி செய்த வழக்கில், MY V3 ADS நிறுவன உரிமையாளர் சக்தி ஆனந்தன் சென்னையில் உள்ள தமிழ்நாடு முதலீட்டாளர் நல பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
வழக்கில் ஜாமின் கோரிய சக்தி ஆனந்தனின் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார். வழக்கை விசாரித்த நீதிபதி வரும் 19ம் தேதி வரை சக்தி ஆனந்தனை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்
கோவையை தலைமையிடமாக கொண்டு மைவி3 ஏட்ஸ் என்ற செயலியை சக்தி ஆனந்தன் என்பவர் நடத்தி வருகிறார். மேலும் யூ டியூப் சமூக வலைதளத்தில் இந்த செயலியின் சேனலும் இயங்கி வருகிறது. இதில் தினமும் 2 மணி நேரம் விளம்பரம் பார்ப்பதன் மூலமும், புதிய நபர்களை சேர்ப்பதன் மூலமும் அதிக வருமானம் பார்க்கலாம் என விளம்பரம் செய்யப்பட்டது இதனை நம்பி ஆயிரக்கணக்கானோர் முதலீடு செய்துள்ளனர். முதலீட்டாளர்களுக்கு கூறியபடி அந்நிறுவனம் மாதா மாதம் பணம் வழங்கி வந்தது குறிப்பிடத்தக்கது.
MyV3Ads என்ற நிறுவனத்தின் சக்தி ஆனந்தன் மற்றும் பிற உரிமையாளர்கள் மீது கோவை மாநகர குற்றப் பிரிவில் இவ்வாண்டு 2024 சனவரி மாதம் Prize Chits and Money Circulation Schemes (Banning) Act 1978, The Banning of unregulated deposit Schemes Act 2019 2 சட்டப்பரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு சக்தி ஆனந்தன் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், வழக்கானது பொருளாதர குற்றப்பிரிவிற்கு மாற்றப்பட்டு அத்துறையின் விசாரணையின் இருந்தது இந்நிலையில் வழக்கில் ஜாமின் கோரிய சக்தி ஆனந்தனின் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார். வழக்கை விசாரித்த நீதிபதி வரும் 19ம் தேதி வரை சக்தி ஆனந்தனை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்
Tags: இந்திய செய்திகள் தமிழக செய்திகள்
