Breaking News

முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது அசாருதீன் இந்து மதத்தை ஏற்றார் என பரவும் தகவல் உண்மை என்ன முழு விவரம் Mohammad Azharuddin Has Not Adopted Hinduism

அட்மின் மீடியா
0

முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது அசாருதீன் இந்து மதத்தை ஏற்றார் என பரவும் தகவல் உண்மை என்ன முழு விவரம் Mohammad Azharuddin Has Not Adopted Hinduism

பரவிய பொய் செய்தி:-

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது அசாருதீன் தனது மனைவி மற்றும் மகனுடன் இஸ்லாத்தை விட்டு வெளியேறி இந்து மதத்தை ஏற்றுக்கொண்டார் 

உண்மை என்ன:-

மதம் மாறியவர் முன்னாள்  இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் முகமது அசாரூதீன் கிடையாது

மாறாக உத்தரபிரதேசத்தில் உள்ள சந்தோலி நகரத்தில் வசிக்கும் முகமது அசாரூதீன் என்பவர் தனது குடும்பத்துடன் இந்து மதத்திற்கு மாறினார், ஆனால் அந்த செய்தி தவறாக திரித்து இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது அசாருதீன் தான் தனது குடும்பத்துடன் மதம் மாறியதாக சமூக வலைதளங்களில் பரவி வருகின்றது. மேலும் வைரல் ஆகும் புகைப்படத்தில் இருப்பது முகமது அசாருதீன் கிடையாது, முன்னாள் கிரிக்கெட் வீரர் அசாருதீன் ஐதராபாத்தில் வசித்து வருவதுடன் காங்கிரஸ் தலைவராகவும் உள்ளார்.

மதம் மாறியவர் பற்றிய செய்தி:-

உத்தரபிரதேசத்தில் உள்ள சந்தோலி சதர் கோட்வாலி பகுதியின் பிச்சியா கிராமத்தில் வசிக்கும் முகமது அசாருதீன், என்ற முஸ்லீம்  சனாதன தர்மத்திற்குத் திரும்பி, தனது பெயரை டபிள்யூ சிங் என மாற்றி கொண்டார் மேலும்  தன் மகனையும் மனைவியையும் சனாதன தர்மத்திற்குத் திரும்பச் செய்தார். எனவும் மனைவி ரிஸ்வானா தனது பெயரை குடியா சிங், என்றும் மகன் எம்டி  ராஜ் சிங் என்றும் மாற்றிக்கொண்டார் என amarujala என்ற செய்தி நிறுவனம் செய்தி வெளிட்டு இருந்தது.சந்தோலியில் உள்ள முஸ்லிம் குடும்பம் வீடு திரும்பிய செய்தி சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

மேலும் ABP தனது யூடியூப்பில் அதன் வீடியோவையும் வெளியிட்டுள்ளது அதனை கீழே ஆதாரமாக கொடுத்துள்ளோம்

அட்மின் மீடியா ஆதாரம் பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

https://www.youtube.com/watch?v=ktrrz29qw-E

அட்மின் மீடியா ஆதாரம் பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

https://www.amarujala.com/uttar-pradesh/varanasi/muslim-family-embraced-sanatan-dharma-and-homecoming-said-culture-influences-them-2024-07-01?pageId=1

Tags: FACT CHECK மறுப்பு செய்தி

Give Us Your Feedback