Breaking News

தூத்துக்குடியில் திடீர் ரெய்டு KFC லைசென்ஸ் ரத்து முழு விவரம்

அட்மின் மீடியா
0

தூத்துக்குடியில் திடீர் ரெய்டு KFC லைசென்ஸ் இடைக்கால ரத்து முழு விவரம்

பிரபல வணிக வளாகத்தில் இயங்கி வரும் கே.எஃப்.சி. உணவகத்தின் உணவு பாதுகாப்பு உரிமம் இடைக்கால ரத்து செய்யப்பட்டுள்ளது.

தூத்துக்குடியில் உள்ள பிரபல வணிக வளாகத்தில் செயல்பட்டு வரும் கே.எஃப்.சி. உணவகத்தின் உணவு பாதுகாப்பு உரிமம் இடைக்கால ரத்து செய்யப்பட்டுள்ளது. 

பழைய எண்ணெய்யை தூய்மைப்படுத்த மெக்னீசயம் சிலிக்கேட் சிந்தடிக்கை பயன்படுத்தியுள்ளார்கள் ,கடையில் 18 கிலோ மெக்னீசியம் சிலிக்கேட் சிந்தடிக், தூய்மைப்படுத்தப்பட்ட 45 லிட்டர் பழைய எண்ணெய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது . 12 மணி நேரத்திற்கும் மேலாக பயன்படுத்தாமல் இருந்த 56 கிலோ சிக்கனை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

கே.எஃப்.சி. உணவகத்தின் உரிமம் இடைக்கால ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் மறு உத்தரவு வரும் வரை கடையை திறக்க கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback