ரிஷி சுனக்கின் கட்சி படு தோல்வி புதிய பிரதமராகிறார் கெய்ர் ஸ்டார்மர் முழு விவரம் Keir Starmer
2010 முதல் 14 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த தற்போதைய பிரதமர் ரிஷி சுனக்கின் கன்சர்வேட்டிவ் கட்சி தேர்தலில் 100 இடங்களில் கூட வெல்ல முடியாமல் படுதோல்வி அடைந்தது இதனால் பிரதமர் பதவியை இழந்தார் ரிஷி சுனக்!
ஆட்சி அமைக்க தேவையான 32 6 மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்று பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியமைக்கிறது தொழிலாளர் கட்சி, பிரிட்டனின் புதிய பிரதமராகிறார் கெய்ர் ஸ்டார்மர்
பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தலில் பிரமாண்ட வெற்றி பெற்று ஆட்சி அமைக்கிறது தொழிலாளர் கட்சி. பிரிட்டனின் புதிய பிரதமராகிறார் கீர் ஸ்டார்மர்! மொத்தமுள்ள 650 இடங்களில் 350க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்றது கீர் ஸ்டார்மரின் தொழிலாளர் கட்சி.
650 தொகுதிகளைக் கொண்ட பிரிட்டன் நாடாளுமன்றத்திற்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது. அந்நாட்டு பிரதமர் ரிஷி சுனக்கின் கன்சர்வேட்டிவ் கட்சி மற்றும் தொழிலாளர் கட்சி இடையே நேரடிப் போட்டி நிலவியது .
கன்சர்வேடிவ் கட்சி சார்பில் தற்போது பிரிட்டன் பிரதமராக ரிஷி சுனக் இருந்து வருகிறார். அவரே அக்கட்சியின் சார்பில் பிரதமர் வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ள நிலையில், தொழிற்கட்சி சார்பில் கீர் ஸ்டார்மர் பிரதமர் வேட்பாளராக நிற்கிறார். இதில் ரிஷி சுனக் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்.
Tags: வெளிநாட்டு செய்திகள்
