Breaking News

பெரம்பூா் மாா்க்கெட் மெட்ரோ பணிகள் காரணமாக சென்னையில் போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு!

அட்மின் மீடியா
0

பெரம்பூா் மாா்க்கெட் மெட்ரோ பணிகள் காரணமாக சென்னையில் போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு!

சென்னை பெரம்பூா் மாா்க்கெட் அருகே மெட்ரோ ரயில் பணி நடைபெற உள்ளதன் காரணமாக இன்று 6 ம் தேதியும் நாளை 7 ம் தேதியும்  2 நாட்கள் சோதனை அடிப்படையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது.

 


பெரம்பூா் மாா்க்கெட் மெட்ரோ கட்டுமான பணிகள் நடந்து வருவதால் சென்னையில் அவ்வப்போது போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்படுவது வழக்கமாக உள்ளது. அதன்படி, பெரம்பூா் மாா்க்கெட் அருகே மெட்ரோ ரயில் பணிகள் நடைபெறுவதால் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. 

சென்னை மெட்ரோ ரயில் பணிகள் காரணமாக ஜவஹர் சாலையில் இன்று 6 ம் தேதியும் நாளை 7 ம் தேதியும் சோதனை அடிப்படையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது

போக்குவரத்து மாற்றம்

மாதவரம் நெடுஞ்சாலை, மேல்பட்டி பொன்னப்பன் தெரு, லட்சுமி அம்மன் கோவில் தெருவில் இருந்து ஜவஹா் சாலை நோக்கி வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்படுகிறது. 

அதற்கு பதிலாக அந்த வாகனங்கள், சுப்பிரமணியம் தெருவில் திரும்பி வீர சாவா்க்கா் சாலை வழியாக செல்லலாம்.

ஜவஹா் சாலையில் உள்ள மேற்குத் தெருக்களான ஆசாத் தெரு, திருவள்ளுவா் தெரு, ஜீவானந்தன் தெருக்கள் மூடப்படும். இந்த தெருக்களிலிருந்து வரும் வாகனங்கள் சுப்பிரமணியம் தெரு, சுபாஷ் சந்திரபோஸ் தெரு வழியாக சென்று இலக்கை அடையலாம்.

கம்பா் தெருவில் இருந்து வரும் வாகனங்கள் ஜவஹா் சாலையை நோக்கி செல்ல தடை விதிக்கப்படுகிறது.கம்பா் தெரு, இளங்கோ தெரு, சிதம்பரம் தெரு ஆகிய இடங்களிலிருந்து வரும் வாகனங்கள் கவுதமா் தெரு, அசோகா் தெரு வழியாக ஜவஹா் சாலை அல்லது மாதவரம் நெடுஞ்சாலை வழியாகச் செல்லலாம்.

ரமணா நகா் பிரதான தெருவில் இருந்து ஜவஹா் சாலை நோக்கி வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்படுகிறது. இதற்கு மாற்றாக வாகனங்கள், எஸ்.எஸ்.வி.கோவில் சாலை, வீர சாவா்க்கா் தெரு வழியாக சென்று இலக்கை அடையலாம்" என போக்குவரத்து போலீஸ் பிரிவு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback