Breaking News

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் திமுக வேட்பாளரை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட பிரச்சார வீடியோ!

அட்மின் மீடியா
0

 விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளரை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட பிரச்சார வீடியோ!

சாதனைகளால் தமிழ்நாட்டை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்லும் விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிடும் திரு. அன்னியூர் சிவா அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெறச் செய்யுங்கள்!

சமூகநீதிக்கு எதிரான பா.ஜ.க. கூட்டணியை தோற்கடிப்பது மூலமாக, சமூகநீதிக்கு துரோகம் இழைப்பவர்ளுக்கு தக்க பாடம் புகட்டுங்கள். கழகத்தின் உண்மைத் தொண்டரான அன்னியூர் சிவா விக்கிரவாண்டி தொகுதி மக்களுக்கு உண்மையான சட்டமன்ற உறுப்பினராக இருப்பார். என  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வருகிற 10-ந்தேதி (புதன்கிழமை) நடைபெற உள்ளது. இத்தேர்தலில் பதிவாகும் வாக்குகள் 13-ந்தேதி (சனிக்கிழமை) எண்ணப்படுகின்றன. 

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில், தி.மு.க., பா.ஜனதா கூட்டணியில் உள்ள பா.ம.க., நாம் தமிழர் கட்சி ஆகிய கட்சிகள் மட்டுமே போட்டியிடுவதால் அங்கு மும்முனை போட்டி நிலவுகிறது. 

தி.மு.க. வேட்பாளராக அன்னியூர் சிவா, 

பா.ம.க. வேட்பாளராக சி.அன்புமணி, 

நாம் தமிழர் கட்சி வேட்பாளராக டாக்டர் அபிநயா ஆகியோர் களத்தில் உள்ளனர். 

இந்நிலையில், விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் அன்னியூர் சிவாவை ஆதரித்து தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் வீடியோ வெளியிட்டு வாக்கு சேகரித்தார் அதில்:-

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் மண்ணின் மைந்தரான திமுக வேட்பாளர் ஆற்றல்மிக்க அன்னியூர் சிவாவிற்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள். மக்களோடு மக்களாக இருந்து பணியாற்றக் கூடிய வேட்பாளர் அன்னியூர் சிவாவை ஆதரிக்க வேண்டும். சாதனைகளால் தமிழ்நாட்டை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்லும் திமுகவை ஆதரியுங்கள்.

வன்னியர் உள்ளிட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்திற்கு 20% உள்ஒதுக்கீடு வழங்கியது திமுக ஆட்சி. 1987 போராட்டத்தில் துப்பாக்கிச்சூட்டில் பலியான போராளிகளுக்கு நினைவு மண்டபம் கட்டப்படுகிறது. சமூகநீதிக்கு எதிரான பாஜக கூட்டணியை விக்கிரவாண்டி தொகுதியில் தோற்கடிக்க வேண்டும். சமூகநீதிக்கு துரோகம் இழைப்பவர்களுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

https://x.com/mkstalin/status/1809036978966470795

Tags: அரசியல் செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback