Breaking News

பானிபூரி சாப்பிட்டால் புற்றுநோய் வருமாம்? தமிழகம் முழுவதும் பானி பூரி கடைகளில் சோதனை செய்ய உத்தரவு முழு விபரம்

அட்மின் மீடியா
0

பானிபூரி சாப்பிட்டால் புற்றுநோய் வருமாம்?  தமிழகம் முழுவதும் பானி பூரி கடைகளில் சோதனை செய்ய உத்தரவு

பானிபூரியில் கலக்கும் செயற்கை நிறமிகளால் புற்றுநோய் ஏற்படும் அபாயம் இருப்பதாக கர்நாடக அதிகாரிகள் நடத்திய ஆய்வில் தெரிய வந்ததால், சென்னையிலும் ஆய்வுக்காக பானிபூரி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு வருகிறது மேலும் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பானி பூரி கடைகளில் சோதனை நடத்த உணவுத்துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார்

கர்நாடக மாநிலத்தில் கர்நாடக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடத்திய ஆய்வில்,  பானி் பூரியில் புற்றுநோயை விளைவிக்கும் செயற்கை நிறமிகள் இருப்பது தெரியவந்தது. 

கர்நாடகா முழுவதும் 260 மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இதில் 41 மாதிரிகளில் புற்றுநோய் விளைவிக்க கூடியதாகவும்,18 மாதிரிகள் மனிதர்கள் உண்பதற்கு தகுதியற்றதாகவும் இருந்ததாக கர்நாடகத்தின் உணவு தரக் கட்டுப்பாட்டு (எஃப்எஸ்எஸ்ஏஐ) அதிகாரிகள் மாநிலம் முழுவதுமிருந்து சேகரித்த உணவு மாதிரிகளில் அதிர்ச்சி தரும் முடிவுகள் வெளியாகியது

இதனை அடுத்து தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பானிபூரி கடைகளிலும் சோதனை நடத்த உணவுத்துறை ஆணையர் சதீஷ்குமார் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார். பானிபூரி கடைகளில் பயன்படுத்தப்படும் பூரி மசால், மசாலா நீரின் மாதிரிகளை சோதனை செய்யவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Tags: இந்திய செய்திகள் தமிழக செய்திகள்

Give Us Your Feedback