மக்காவில் சாலை விபத்து செங்கல்பட்டு, கல்பாக்கத்தை சேர்ந்த ஹாஜி உயிரிழப்பு முழு விவரம்
செங்கல்பட்டு மாவட்டம் ர் கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் உள்ள மத்திய பொதுப்பணித்துறை அலுவலகத்தில் ஊழியராக பணி புரிந்து வந்த சாதிக்பாஷா வயது 47 இவர் தனது மனைவி ஹஸ்ரா சகானாஸ் (40), தாயார் இர்ஷாத்பேகம் - (67), உள்ளிட்டோருடன் கல்பாக்கத்தில் உள்ள அணுமின் நிலைய ஊழியர் குடியிருப்பில் வசித்து வந்தார்.
அவர் தனது தயார் இர்ஷாத்பேகம், மனைவி ஹஸ்ரா சகானாஸ் ஆகியோருடன் இந்த வருடம் ஹஜ் புனித பயணம் சென்றிருந்தார்
இந்நிலையில் கடந்த 30.06.2024 அன்று மெக்காவில் இருந்து மதினாவிற்கு பேருந்தில் ஹஜ் குழுவினருடன் சென்று கொண்டிருந்தனர் இந்த வாகனத்தில் மொத்தம் 11 பேர் பயணம் செய்துள்ளனர். அதில் 9 பேர் தமிழ்நாட்டைச் சார்ந்தவர்கள் இருந்துள்ளார்கள். அவர்கள் சென்ற பேருந்து சாலை விபத்தில் சிக்கியது. இதில் சாதிக் அவர்களின் தாயார் இர்ஷாத்பேகம் சம்பவ இடத்திலேயே தலையில் பலத்த அடிபட்டு இறந்தார்.
பலத்த காயமடைந்த சாதிக் பாஷாவும் அவரது மனைவி ஹஸ்ரா சகானாஸ் ஆகிய இருவரும் சவுதி ஜெர்மன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இதில் தலையில் பலத்த காயம் அடைந்த சாதிக் பாஷா கோமா நிலைக்கு சென்று சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இன்று மரணமடைந்தார் அவரது மனைவி ஹஸ்ரா சகானாவிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் சாலை விபத்தில் சாதிக்பாஷா-இர் ஷாத்பேகம் ஆகியோரது உடல்கள் அவர்களுடைய உறவினர்களின் அனுமதியுடன் சவுதி அரேபியாவிலேயே நல் லடக்கம் செய்யப்பட உள்ளது.
Tags: தமிழக செய்திகள் வெளிநாட்டு செய்திகள்
