Breaking News

செங்குன்றம் அருகே உள்ள பொத்தூரில் ஆம்ஸ்ட்ராங் உடலை அடக்கம் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு முழு விவரம்

அட்மின் மீடியா
0

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே உள்ள பொத்தூரில் ஆம்ஸ்ட்ராங் உடலை அடக்கம் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு


தமிழக பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் (வயது 52). இவர் சென்னை பெரம்பூர்  பகுதியில் வசித்து வருகின்றார்

நேற்று முன்தினம் மாலை இங்கு வந்திருந்த ஆம்ஸ்ட்ராங்கை மர்ம கும்பலினர் அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்தனர்.உடனடியாக ஆம்புலன்ஸ் மூலமாக கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு அவரை அழைத்துச் சென்ற நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்நிலையில், ஆம்ஸ்ட்ராங் உடலை பகுஜன் சமாஜ் கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்ய சென்னை மாநகராட்சிக்கு கோரிக்கை மனு அளிக்கப்பட்ட நிலையில் ஆனால், குடியிருப்பு பகுதியிலேயே உடலை அடக்கம் செய்ய பல்வேறு கட்டுப்பாடுகள் இருப்பதாக கூறி மாநகராட்சி நிர்வாகம் அனுமதி மறுத்தது.

இந்த நிலையில் ஆம்ஸ்ட்ராங் உடலை சென்னையில் உள்ள கட்சி அலுவலக வளாகத்தில் அடக்கம் செய்ய அனுமதி கோரி அவரது மனைவி பொற்கொடி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். 

வழக்கு விசாரணையில் அடக்கம் செய்யும் இடத்தில் மணிமண்டபம் கட்டும் போது பெரிய இடம் வேண்டுமே? ஆர்ம்ஸ்ட்ராங் மரணம் பெரிய இழப்பாக இருந்தாலும், சட்ட விதிகளை மீற முடியாது. நாளை வீர வணக்கம் போன்ற நிகழ்வின் போது ஆயிரக்கணக்கான மக்கள் வந்தால் என்ன செய்வது. போதுமான இடம் இல்லாமல் அனுமதி வழங்க நீதிமன்றம் தயாராக இல்லை. தற்போதைக்கு அரசு ஒதுக்கும் இடத்தில் அடக்கம் செய்து விட்டு, வேறு இடத்தை அடையாளம் கண்டு மணிமண்டபம் கட்டிக் கொள்ளலாம் என நீதிபதி பாவனா கருத்து கூறினார்

ஆம்ஸ்ட்ராங் உடலை அடக்கம் செய்ய மனுதாரர் தெரிவிக்கும் புதிய இடமும் குடியிருப்பு பகுதியாகும். குடியிருப்பு பகுதியில் உடலை அடக்கம் செய்ய எப்படி அனுமதி வழங்க முடியும்?. முதலில் அரசு கூறும் இடத்தில் அடக்கம் செய்யுங்கள். உங்கள் விண்ணப்பத்தை மாநகராட்சி நிராகரித்துள்ளது. அரசுதான் உங்கள் கோரிக்கையை பரிசீலிக்க வேண்டும். 

உடலை பள்ளியில் வைத்திருக்க முடியாது. ஆம்ஸ்ட்ராங் உடலை அரசு ஒதுக்கும் இடத்தில் அடக்கம் செய்வது நல்லது. அரசு தரப்பில் தரப்படும் புதிய இடம் தொடர்பாக அரசிடம் ஆம்ஸ்ட்ராங் மனைவி மனு அளிக்கலாம். அந்த மனுவை பரிசீலித்து அரசு முடிவெடுக்க வேண்டும்.

நாளை பள்ளிகள் திறக்கவுள்ளதால் இன்றே உடலை அடக்கம் செய்ய வேண்டும். புதிதாக குறிப்பிடும் நிலத்தின் சாத்தியக்கூறுகள் குறித்து அரசு ஆராய வேண்டும். குடியிருப்பு பகுதியில் அடக்கம் செய்ய சிலர் ஆட்சேபம் தெரிவிக்கலாம். 

ஒதுக்குபுறமாக விசாலமான இடத்தை தேர்ந்தெடுங்கள். நல்ல இடத்தில் மணிமண்டபம் அமைக்கலாம். இது தொடர்பான வழக்கில் நீதிமன்றம் அதிகார எல்லையைத் தாண்ட முடியாது. உடல் அடக்கம் தொடர்பான இடத்தை தேர்வு செய்வதில் அரசுதான் முடிவு எடுக்க முடியும்.” என்று கூறி வழக்கு விசாரணையை மதியம் 2:15 மணிக்கு ஒத்திவைத்தார். 

அதனை தொடந்ர்து ஆம்ஸ்ட்ராங் உறவினரின் பட்டா சொத்து சுமார் 9475 சதுர அடி இடம் உள்ளது, அதில் நல்லடக்கம் செய்யவேண்டும் என மனுதாரர் தரப்பில் அனுமதி அளிக்ககோரினார் அதனை தொடர்ந்து செங்குன்றம் அருகே உள்ள பொத்தூரில் ஆம்ஸ்ட்ராங் உடலை அடக்கம் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளார்.

Tags: அரசியல் செய்திகள்

Give Us Your Feedback