Breaking News

ஆம்ஸ்ட்ராங் உடல் பகுஜன் சமாஜ் அலுவலகத்தில் அடக்கம் செய்யப்படுமா? உயர் நீதிமன்றத்தில் வழக்கு..முழு விபரம்

அட்மின் மீடியா
0

ஆம்ஸ்ட்ராங் உடல் பகுஜன் சமாஜ் அலுவலகத்தில் அடக்கம் செய்யப்படுமா? உயர் நீதிமன்றத்தில் வழக்கு..முழு விபரம்

தமிழக பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் (வயது 52). இவர் சென்னை பெரம்பூர்  பகுதியில் வசித்து வருகின்றார்

நேற்று முன்தினம் மாலை இங்கு வந்திருந்த ஆம்ஸ்ட்ராங்கை மர்ம கும்பலினர் அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்தனர்.உடனடியாக ஆம்புலன்ஸ் மூலமாக கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு அவரை அழைத்துச் சென்ற நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்நிலையில், ஆம்ஸ்ட்ராங் உடலை பகுஜன் சமாஜ் கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்ய சென்னை மாநகராட்சிக்கு கோரிக்கை மனு அளிக்கப்பட்ட நிலையில் ஆனால், குடியிருப்பு பகுதியிலேயே உடலை அடக்கம் செய்ய பல்வேறு கட்டுப்பாடுகள் இருப்பதாக கூறி மாநகராட்சி நிர்வாகம் அனுமதி மறுத்தது.

இந்த நிலையில் ஆம்ஸ்ட்ராங் உடலை சென்னையில் உள்ள கட்சி அலுவலக வளாகத்தில் அடக்கம் செய்ய அனுமதி கோரி அவரது மனைவி பொற்கொடி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். 

இதனை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என பொறுப்பு தலைமை நீதிபதி ஆர்.மகாதேவனிடன் அவரது தரப்பு வழக்கறிஞர்கள் முறையிட்டனர். இதனை ஏற்ற தலைமை நீதிபதி, அவசர வழக்காக விசாரிக்க அனுமதி வழங்கினார்.

இந்த வழக்கு நீதிபதி பவானி சுப்பராயன் முன்பு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டது. இன்று  இந்த வழக்கு காணொலி காட்சி வாயிலாக விசாரணைக்கு வரவுள்ளது.

Tags: அரசியல் செய்திகள்

Give Us Your Feedback