Breaking News

தன்னை கடித்த கொடிய விஷமுள்ள பாம்பை கடித்து பழி வாங்கிய நபர் காரணம் தெரியுமா முழு விவரம்

அட்மின் மீடியா
0

தன்னை கடித்த கொடிய விஷமுள்ள பாம்பை கடித்து பழி வாங்கிய நபர் காரணம் தெரியுமா முழு விவரம்

பீகார் மாநிலம் ரஜோலியில், ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த சந்தோஷ் லோஹர் என்ற தொழிலாளி பணிபுரிந்து வருகிறார். கடந்த செவ்வாய்க்கிழமை இரவில், தூங்கிக் கொண்டிருந்தபோது பாம்பு அவரைக் கடித்தது. 

இதையடுத்து அவர் பாம்பை பிடித்து கடித்துள்ளார்,  உடனடியாக சந்தோஷை அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அவருக்கு, உடனடியாக மருத்துவர்கள் சிகிச்சை அளித்து காப்பாற்றினர்.ஆனால் கடிபட்ட பாம்பு இறந்தது

எனது கிராமத்தில், பாம்பு கடித்தால், விஷம் ஏறாமல் தடுக்க, அதை மீண்டும் கடிக்க வேண்டும் என்ற நம்பிக்கை உள்ளது. இதன் காரணமாகத்தான் பாம்பை கடித்ததாக அவர் தெரிவித்துள்ளார். 

இந்த நிகழ்வு குறித்து, மருத்துவர்கள் கருத்து தெரிவிக்கையில், பாம்பை திருப்பி கடித்தால் விஷம் ஏறாது என்பது மூட நம்பிக்கையாகும். இதுபோன்று பாம்பு கடித்தால், திருப்பி கடிக்க கூடாது. உடனடியாக மருத்துவமனைக்குச் சென்று உரிய சிகிச்சையை எடுத்துக் கொள்ள வேண்டும். இவரை போன்று, செயல்பாடுகளில் ஈடுபட கூடாது என தெரிவித்துள்ளனர்.

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback