ஆம்ஸ்ட்ராங் கொலைக்கான காரணம் என்ன ? கைதானவர்கள் அளித்த வாக்குமூலம்
ஆம்ஸ்ட்ராங் கொலைக்கான கார்னம் என்ன ? ஆற்காடு சுரேஷ் பிறந்தநாளில் பழிதீர்த்த தம்பி கைதானவர் வாக்குமூலம்
சென்னையில் உள்ள பெரம்பூர் பகுதியில் வசித்து வருபவர் ஆம்ஸ்ட்ராங். இவர் மாயாவதியின் பகுஜன் சமாஜ்வாதி கட்சி தமிழ்நாடு மாநில தலைவராக இருந்து வருகிறார்.
இன்று மாலை ஆம்ஸ்ட்ராங் தனது வீட்டருகே இருந்தபோது இரண்டு இருசக்கர வாகனத்தில் வந்த 6 பேர் கொண்ட அடையாளம் தெரியாத கும்பல், ஆம்ஸ்ட்ராங்கை திடீரென சுற்றிவளைத்து சரமாரியாக அரிவாளால் வெட்டிச்சாய்த்து பின் அங்கிருந்து தப்பி சென்றது.
இதையடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்
இதைத் தொடர்ந்து கொலையாளிகளை பிடிக்க 5 தனி பிரிவு அமைக்கப்பட்டு காவல்துறையினர் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்கள் மூலம் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
கொலையாளிகள் பயன்படுத்திய பட்டா கத்தியை சம்பவ இடத்தில் கிடந்த நிலையில் அதனைக் கைப்பற்றி தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் சம்பவத்தில் தொடர்புடைய ஆற்காட்டு சுரேஷின் தம்பி பாலு உள்ளிட்ட 8 பேர், சென்னை அண்ணா நகர் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளனர்.
இது தொடர்பாக சென்னை வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் அஸ்ரா கார்க் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது
பகுஜன் சமாஜ் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலையில் தற்போது 8 நபர்களை கைது செய்து தீவிர விசாரணை செய்து வருகிறோம். விசாரணைக்கு பின்னர் தான் கொலையின் நோக்கம் என்ன என்பது குறித்து தெரியவரும்.
கொலை சம்பவம் நடந்து நான்கு மணி நேரத்தில் 8 நபர்களை கைது செய்து உள்ளோம் கொலையின் உண்மையான காரணம் குறித்து விசாரணை நடத்தப்படும். கைதானவர்கள் பெயர் விவரங்களை தற்போது தெரிவிக்க முடியாது.' என தெரிவித்தார்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு கைதானவர்கள் ஆற்காடு சுரேஷ் சகோதரர் பொன்னை பாலு, ராமு, திருவேங்கடம், திருமலை, செல்வராஜ், மணிவண்ணன், சந்தோஷ், அருள் உள்ளிட்ட எட்டு நபர்களையும் ரகசிய இடங்களில் வைத்து காவல்துறை தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றார்கள்
ஆம்ஸ்டராங்கை வெட்டிக் கொலை செய்துவிட்டு குற்றவாளிகள் தப்பிச்செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிசிடிவி வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்
https://x.com/kani_twitz24/status/1809365482144952480
இந்நிலையில் பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலையை கண்டித்து, சென்னை ராஜீவ்காந்தி மருத்துவனை முன்பு ஆதரவாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். போக்குவரத்து பாதிப்பு உடலை வாங்க மறுத்து சென்ட்ரல் அருகே ஈவேரா பெரியார் சாலையில் ஆம்ஸ்ட்ராங்கின் ஆதரவாளர்கள் மறியலில் ஈடுபட்டனர்
வாக்குமூலம்:-
இந்நிலையில் அண்ணன் ஆற்காடு சுரேஷின் பிறந்தநாளில் திட்டமிட்டு கொலை செய்ததாக கைதான பாலா வாக்குமூலம் என தகவல் வெளியாகியுள்ளது. "அண்ணனைக் கொன்றதோடு ஜெயபால், ஆம்ஸ்ட்ராங் தரப்பினர் எனக்கும் கொலை மிரட்டல் விடுத்தனர்
தொடர் கொலை மிரட்டல் வந்ததால், என் மனைவியே பயத்தில் என்னை பிரிந்துசென்றுவிட்டார்" என்று புன்னை பாலா வாக்குமூலம் அளித்துள்ளார். என தகவல்கள் வெளியாகி உள்ளது
பெரம்பூர் பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் திருமலை என்பவர் ஆம்ஸ்ட்ராங் வீடு உள்ள பகுதியில் இருக்கும் பள்ளி அருகே ஆட்டோவை நிறுத்துவது போல ஒருவாரமாக நோட்டமிட்டு வந்துள்ளார். ஆம்ஸ்ட்ராங் அடிக்கடி தான் கட்டி வரும் வீட்டருகே குறைந்த அளவிலான நண்பர்களுடன் வருவதை நோட்டமிட்டு புன்னை பாலுவுக்கு தகவல் கொடுத்துள்ளார்.என தகவல்கள் வெளியாகி உள்ளது.
சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் விளக்கம்
ஆம்ஸ்ட்ராங் கொலையில் அரசியல் உள்நோக்கம் இல்லை - காவல் ஆணையர் விளக்கம்
ஆம்ஸ்ட்ராங் கொலை நடந்த 3 மணி நேரத்திற்குள் 8 பேர் கைது செய்யப்பட்டனர்
ஆம்ஸ்ட்ராங் கொலையில் சிலர் மீது சந்தேகம் உள்ளது தொடர்புடைய மற்ற நபர்களை பிடிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது
கொலை வழக்கில் தொடர்புடையோருக்கு உரிய தண்டனை கிடைக்கும் படி நடவடிக்கை எடுப்போம்
நிலைமை
கட்டுக்குள் உள்ளது; முக்கிய இடங்களில் தேவையான பாதுகாப்பு
தரப்பட்டுள்ளது- சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் விளக்கம் அளித்துள்ளார்
Tags: தமிழக செய்திகள்
