Breaking News

ஓடாத ரயிலுக்கு முன்பதிவு ஆன்லைன் மோசடி என பரவும் தகவல் தென்னக ரயில்வே விளக்கம்

அட்மின் மீடியா
0

திருச்சி மாவட்டம் திருவெறும்பூரை சேர்ந்தவர் உமா ராமசாமி ( 75). 05.07.2024 அன்று திருச்சியில் இருந்து பெங்களூர் செல்வதற்கு ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய நேற்று அருகில் உள்ள ஆன்லைன் சென்டருக்கு சென்றுள்ளார்.

அப்போது அவரது பயணத்திற்காக ரயிலில் 3 வகுப்பு ஏசி பெட்டியில் உமாராமசாமி டிக்கெட் முன்பதிவு செய்தார்.அவருக்கு முன்பதிவு டிக்கெட் உறுதி செய்யப்பட்டு B9 பெட்டியில், 9ம் நம்பர் லோயர் பெர்த் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதற்காக ரூ875 அவர் செலுத்தினார். பின்னர் அவருக்கு டிக்கெட் உறுதி செய்யப்பட்ட விவரம் குறுந்தகவலாக அனுப்பப்பட்டது.



இதனை தொடர்ந்து அடுத்து 15 நிமிடத்தில் அவரது டிக்கெட் கேன்சல் செய்யப்பட்டதாகவும் பிடித்தும் போக மீதி 650 ரூபாய் உங்களது வங்கி கணக்கில் செலுத்தப்படும் எனவும் குறுந்தகவல் வந்தது. 

இதில் அதிர்ச்சி அடைந்த உமா ராமசாமி ரயில்வே விசாரணை எண் 139க்கு தொடர்பு கொண்டு பேசினார். வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரி உமா ராமசாமியிடம் பேசியபோது, அவர் புக்கிங் செய்த தேதியில் அந்த ரயில் இல்லை என கூறினார்.

பின்னர் வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரிகள் குறிப்பிட்ட ரயில் இல்லை என கூறுவது ஏற்புடையதாக இல்லை. மேலும் டிக்கெட் முன்பதிவு தானாக ரத்து செய்யப்பட்டதால் தமக்கு 200 ரூபாய் இழப்பீடு ஏற்பட்டதுடன்மிகுந்த மன உளைச்சல் அடைந்ததாக மூதாட்டி உமா ராமசாமி தெரிவித்தார்.

இது குறித்து தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில்:-

ரயில் 6.22498 (பிஎன்ஆர் 4615714220) திருச்சியில் இருந்து கிருஷ்ணராஜபுரத்திற்கு 3வது ஏசி வகுப்பில் உறுதிசெய்யப்பட்ட முன்பதிவு டிக்கெட்டை ஐஆர்சிடிசி தனது அனுமதியின்றி ரத்து செய்ததாகக் கூறி திருச்சியில் உள்ள பெண் ஒருவர் அளித்த ஊடகப் பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்

இது தொடர்பாக, தெற்கு ரயில்வே விசாரணைக்கு பின், பின்வரும் உண்மைகள் கண்டறியப்பட்டுள்ளன :-

அவர் தனது அண்டை வீட்டாரான திரு தேவராஜ் மூலம் அவரது தனிப்பட்ட ஐடியிலிருந்து டிக்கெட்டை முன்பதிவு செய்தார்.ஐஆர்சிடிசி இணையதளப் பதிவுகளில் இருந்து, ஸ்ரீ தேவராஜ் தனது சொந்த ஐடியைப் பயன்படுத்தி ஐஆர்சிடிசி மூலம் ஆன்லைனில் தனது டிக்கெட்டை ரத்து செய்ததாகவும், பணத்தைத் திரும்பப்பெறும் தொகை மாற்றப்படும் நிலையில் இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

எனவே, ஐஆர்சிடிசி மூலம் டிக்கெட் தானாக ரத்து செய்யப்பட்டதாக அவர் கூறியது தவறானது என கண்டறியப்பட்டுள்ளது.இந்த உண்மை தகவலை திரு தேவராஜ் அவர்களால் தொலைபேசி மூலமாகவும் உறுதி செய்யப்பட்டுள்ளது

Tags: இந்திய செய்திகள் தமிழக செய்திகள்

Give Us Your Feedback