Breaking News

ஆம்ஸ்ட்ராங் படுகொலை சிபிஐ விசாரணை தேவை மாயாவதி கோரிக்கை வீடியோ இணைப்பு

அட்மின் மீடியா
0

ஆம்ஸ்ட்ராங் படுகொலை சிபிஐ விசாரணை தேவை மாயாவதி கோரிக்கை

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். பெரம்பூரில் வீட்டின் அருகே 6 பேர் கொண்ட மர்ம நபர்கள் சரமாரியாக அரிவாளால் வெட்டினர். இதில் படுகாயமடைந்த  அவர் அப்போலோ மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்

உயிரிழந்த ஆம்ஸ்ட்ராங்கின் உடல் பெரம்பூர் மாநகராட்சி பள்ளியில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அவரது உடலுக்கு பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய தலைவர் மாயாவதி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

அதன் பிறகு அவரது குடும்பத்தினரையும் சந்தித்து ஆறுதல் கூறிய அவர் அதன்பின்பு தமிழ்நாட்டில் பகுஜன் சமாஜ் கட்சியை பலப்படுத்தியவர் ஆம்ஸ்ட்ராங். அவரது மரணம் கட்சியின் பிரச்சனை இல்லை, இது தமிழ்நாட்டின் பிரச்சனை. முதலமைச்சர் மாநிலத்தின் சட்டம் ஒழுங்கை காக்க வேண்டும் என்றும் தலித் மக்களை பாதுகாக்க வேண்டும் என்று கூறினார். ஆம்ஸ்ட்ராங் மரண வழக்கை உடனடியாக சிபிஐக்கு மாற்ற வேண்டும்" என்றும் தெரிவித்தார்.

வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

https://x.com/ANI/status/1809825958893088958

Tags: அரசியல் செய்திகள்

Give Us Your Feedback