Breaking News

நீட் தேர்வு சம்மந்தமாக தமிழக வெற்றிக்கழக தலைவர் நடிகர் விஜய் கூறியது என்ன வீடியோ இதோ

அட்மின் மீடியா
0

 நீட் தேர்வு சம்மந்தமாக தமிழக வெற்றிக்கழக தலைவர் நடிகர் விஜய் கூறியது என்ன வீடியோ இதோ

சென்னை திருவான்மியூரில் நடைபெறும் கல்வி விருது வழங்கும் விழாவு அரங்குக்கு வந்த தவெக தலைவர் விஜய் 12ம் வகுப்பில் சாதித்த திருநங்கை மாணவி நிவேதா அருகில் அமர்ந்து அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டதுடன் அவரை வாழ்த்தினார்.

அதன் பின்னர் மாணவர்கள் மத்தியில் பேசிய அவர், எதுவும் பேச வேண்டாம் என்று நினைத்தேன். ஆனால், நீட் பற்றி பேச வேண்டும் என்று முடிவு எடுத்துவிட்டுதான் வந்தேன். நீட்டால் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்

நீட் தேர்வு என்பது தமிழ்நாட்டில் மாணவ, மாணவிகளை கிராமப்புற பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மாணவிகள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர் என்பதுதான் சத்தியமான உண்மை

கல்வி என்பது மாநிலப் பட்டியலில்தான் 1975-க்கு முன்பு வரை இருந்தது. அதன்பின்னர்தான் ஒன்றிய அரசு மாநிலப் பட்டியலில் இருந்து கல்வியை பொதுப் பட்டியலுக்கு மாற்றியது. ஆகையால் கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மீண்டும் கொண்டுவர வேண்டும். அதில் ஏதேனும் சிக்கல் இருந்தால் அரசியல் சாசனத்தில் திருத்தம் கொண்டுவர வேண்டும்; சிறப்பு பொதுப்பட்டியலை உருவாக்கி கல்வி, சுகாதாரத்தை இடம் பெறச் செய்ய வேண்டும் என கூறிய அவர்

மாநில மொழியில் படித்துவிட்டு, என்.சி.இ.ஆர்.டி. பாடத்திட்டத்தில் தேர்வு வைத்தால் அது எப்படி? அதுவும் கிராமப்புறத்தில் இருக்குற மாணவ, மாணவிகளின் மருத்துவ படிப்புக்கு அது எவ்வளவு கடினமானது

நீட் முறைகேடுகளால் நீட் தேர்வு மீதான நம்பகத்தன்மையே போய்விட்டது. இதற்கு ஒரே தீர்வு நீட் தேர்வு ரத்து நீட் விலக்கு தமிழ்நாடு அரசு நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரி கொண்டு வந்துள்ள மசோதாவை நான் முழுமையாக வரவேற்கிறேன். இதற்கு ஒன்றிய அரசு காலதாமதம் செய்யாமல், தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து சீக்கிரம் தீர்வு காண வேண்டும். இதற்கு நிரந்தர தீர்வு என்னவென்றால் கல்வியை பொதுப்பட்டியலில் இருந்து மாநிலப்பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும்.அதில் சிக்கல் இருந்தால் இடைக்கால தீர்வாக சிறப்பு பொதுப்பட்டியலை கொண்டு வந்து அதில் கல்வி, சுகாதாரத்தை சேர்க்க வேண்டும். இப்போ இருக்குற பொதுப்பட்டியலில் என்ன பிரச்சினை என்றாலும், மாநில அரசுக்கு என்னதான் அதிகாரம் இருந்தாலும் அது ஒன்றிய அரசிடம்தான் கட்டுப்பாடு இருக்கிறது. அதனால், மாநில அரசுகளுக்கு முழு சுதந்திரத்தை தர வேண்டும் என்பதுதான் என்னுடைய தாழ்மையான வேண்டுகோள். என கூறிய நடிகர் விஜய்

நீட் தேர்வில் ஏற்பட்ட குளறுபடிகளைப் பற்றிய செய்திகள் வெளியான பிறகு மக்கள் மத்தியில் அந்த தேர்வின் மீதான நம்பிக்கையே பொய்த்துவிட்டது. நாடு முழுவதும் நீட் தேர்வு தேவை இல்லை என்பதுதான் அந்த குளறுபடிகளின் வழி நாம் புரிந்துகொள்ளும் செய்தி. என கூறினார் .

https://x.com/thisisRaj_/status/1808369014369910947

Tags: அரசியல் செய்திகள்

Give Us Your Feedback