Breaking News

அமர்நாத் பயணிகளை ஏற்றி சென்ற பேருந்தின் பிரேக் பழுதடைந்ததால் உயிர் பயத்தில் ஓடும் பேருந்தில் இருந்து குதித்த பக்தர்கள் வைரல் வீடியோ

அட்மின் மீடியா
0

அமர்நாத் பயணிகளை ஏற்றி சென்ற பேருந்தின் பிரேக் பழுதடைந்ததால் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள ஓடும் பேருந்தில் இருந்து குதித்த பக்தர்கள் வைரல் வீடியோ

ஜம்மு காஷ்மீரில் அமர்நாத் யாத்திரிகளை ஏற்றிச் சென்ற பேருந்தின் பிரேக் செயலிழந்ததால் உயிர் பயத்தில் கீழே குதித்த 10 பயணிகள் காயம்!

கட்டுப்பாட்டை இழந்த பேருந்தில் 40 பேர் பயணம் செய்த நிலையில், போலீசார் பத்திரமாக தடுத்து நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது

அமர்நாத் செல்லும் பயணிகளை அழைத்துச் சென்ற பேருந்து பிரேக் பிடிக்காததால் உயிரைக் காக்க ஓடும் பேருந்தில் இருந்து குதித்த பக்தர்கள்.

ஜம்மு காஷ்மீரில் உள்ள அமர்நாத் செல்லும்  செவ்வாயன்று அமர்நாத்தில் இருந்து பஞ்சாப் ,மாநிலம் ஹோஷியார்பூர் செல்ல பக்தர்களை ஏற்றி சென்ற பேருந்து ராம்பன் மாவட்டம் தேசிய நெடுஞ்சாலை 44 இல் பானிஹால் அருகே நச்லானாவை அடைந்தபோது  பஸ்ஸில் தீடிரென பிரேக் கட்டுப்பாட்டை இழந்தது , இதனால் பேருந்தில் இருந்தவர்கள் உயிர் பயத்தில் கத்தி கூச்சலிட்டனர், மேலும் தங்கள் உயிரை காத்துகொள்ள ஓடும் பேருந்தில் இருந்து குதித்தனர் இந்த சம்பவத்தில் 6 ஆண்கள், 3 பெண்கள் மற்றும் ஒரு குழந்தை உட்பட 10 பேர் காயமடைந்துள்ளனர்.இந்த சம்பவத்தில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் ஓடும் பேருந்தில் இருந்து மக்கள் குதிப்பதை கண்ட இந்திய ராணுவமும் ஜம்மு காஷ்மீர் காவல்துறையும் இணைந்து உடனடியாக செயல்பட்டு, வாகனத்தின் டயர்களுக்குக் கீழே கற்களை வைத்து பேருந்து பள்ளதாக்கில் விழாமல் தடுத்து நிறுத்தியுள்ளனர், இதனால் பெரும் அசம்பாவிதத்தைத் தடுக்கப்பட்டுள்ளது.

மேலும் சம்ப இடம் வந்த ஆம்புலன்ஸ் காயம் அடைந்தவர்களுக்கு மருத்துவ உதவி மற்றும் முதலுதவி அளிக்கப்பட்டது

இந்நிலையில் இந்த சம்பவத்தின் திடுக்கிடும் வீடியோ காட்சிகள் தற்போது வைரல் ஆகின்றது

வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

https://x.com/himalayanhindu/status/1808205304242295184

Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback