Breaking News

நெல்லை மாநகராட்சி ,கோவை மாநகராட்சி மேயர்கள் ராஜினாமா முழு விவரம்

அட்மின் மீடியா
0

கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

கோவை மாநகராட்சி திமுக மேயர் கல்பனா ஆனந்தகுமார். இவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். மாநகராட்சி ஆணையரிடம் ராஜினாமா கடிதத்தை தனது உதவியாளர் மூலம் வழங்கியுள்ளார். உடல் நிலையை காரணம் காட்டி கல்பனா பதவியை ராஜினாமா செய்துள்ளார் என கோவை மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் தெரிவித்துள்ளார்.

கோவை மேயர் கல்பனாவின் ராஜினாமாவை தொடர்ந்து நெல்லை மேயர் சரவணனும் ராஜினாமா செய்துள்ளார். இவர் தனது ராஜினாமா கடிதத்தை நெல்லை மாநகராட்சி ஆணையருக்கு அனுப்பினார். 

 



நெல்லை மேயர் ராஜினாமா

நெல்லை மாநகராட்சி மேயராக தி.மு.க-வை சேர்ந்த பி.எம்.சரவணன் உள்ளார். அவர் பொறுப்பேற்ற நாளில் இருந்தே ஆளுங்கட்சி கவுன்சிலர்களுக்கும் அவருக்கும் இடையே மோதல் போக்கு நீடித்தது.அதனால் அவரை மாற்ற வேண்டும் என்று பலமுறை கட்சித் தலைமைக்கு கவுன்சிலர்கள் கோரிக்கை விடுத்ததுடன், மாநகராட்சி கூட்டங்களிலேயே மேயருக்கு எதிராக பேசி வந்தனர்.

இந்நிலையில் நெல்லை மாநகராட்சி மேயர் மீது திமுக கவுன்சிலர்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வந்த நிலையில் நெல்லை மாநகராட்சி மேயர் சரவணன் ராஜினாமா செய்துள்ளார்.

நெல்லை, கோவை மேயர்கள் மீது தலைமைக்கு வந்த தொடர் புகார்களின் அடிப்படையில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு விசாரணை நடத்தினார். அமைச்சரின் விசாரணையை தொடர்ந்து கட்சி் மேலிட அறிவுறுத்தலின்படி இருவரும் ராஜினாமா என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tags: அரசியல் செய்திகள்

Give Us Your Feedback