உலகின் முதல் சிஎன்ஜி பைக் அறிமுகப்படுத்திய பஜாஜ் சிறப்பம்சங்கள் முழு விவரம் bajaj freedom 125 review tamil
உலகின் முதல் சிஎன்ஜி பைக் அறிமுகப்படுத்திய பஜாஜ் சிறப்பம்சங்கள் முழு விவரம்
புதிய மோட்டார் சைக்கிளை பஜாஜ் ஆட்டோ நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.ஃப்ரீடம் என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள மோட்டார் சைக்கிளில் சிஎன்ஜி, பெட்ரோல் இரண்டையும் பயன்படுத்தலாம்.
2 கிலோ சிஎன்ஜி வாயுவும் தனியே 2 லிட்டர் பெட்ரோலும் நிரப்பும் டேங்க் வசதியுடன் ஃப்ரீடம் மோட்டார் சைக்கிள் தயாரிக்கப்பட்டுள்ளது.மேலும் ஒரு கிலோ எரிவாயுவுக்கு 100 கி.மீ. தூரம் ஓடும் எனவும் மேலும் ஒரே நேரத்தில் சிஎன்ஜி மற்றும் பெட்ரோல் என மாற்றி மாற்றி எரிபொருளை பயன்படுத்தி இந்த பைக்கை இயக்கலாம் எனவும் இதன் மூலம் பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி ஆகியவற்றை பயன்படுத்தி இந்த பைக் முழு எரிபொருளில் 330கிலோமீட்டர் வரை பயணிக்கும் திறன் கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது.
பஜாஜ் நிறுவனம் உலகின் முதல் சிஎன்ஜி பைக்கை இன்று அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பைக் ரூ95 ஆயிரம் என்ற ஆரம்ப விலையில் அறிமுகமாகியுள்ளது.
மேலும் இந்த பைக் முதல் கட்டமாக மகாராஷ்டிரா மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் அடுத்த 3 மாதத்திற்குள் ஒவ்வொரு மாநிலமாக விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
3 மாடல்கள்:-
பிரீடம்125 என்ஜி 04 டிஸ்க் எல்இடி,
ஃப்ரீடம்125 என்ஜி 04 டிரம் எல்இடி,
ஃப்ரீடம்125 டிரம் ஆகிய வேரியண்ட்கள்
சிறப்பம்சங்கள்:-
ப்ளூடூத் கனெக்டிவ் கனெக்டிவிட்டி ஆப்ஷன்
டூயல் கலர்
125 சிசி இன்ஜின்
எல்இடி ஹெட் லைட்டுகள்
மோனோ ஷாக் சஸ்பென்ஷன்
சீட்டுக்கு அடியிலேயே 2 கிலோ சிஎன்ஜி டேங்க் வழங்கப்பட்டுள்ளது
ஏர்-கூல்டு, சிங்கில் சிலிண்டர் எஞ்சின் வழங்கப்பட்டு இருக்கிறது. இது 9.5 ஹெச்.பி. பவர், 9.7 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது.
5 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்
https://www.bajajauto.com/bikes/freedom/freedom-125-ng04-disc-led
Tags: தொழில்நுட்பம்




