பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் 8 தமிழர்கள் முழு விவரம் britain election
பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் தமிழர்கள் முழு விவரம்! பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தலில் 8 தமிழர்கள் வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்
650 தொகுதிகளைக் கொண்ட பிரிட்டன் நாடாளுமன்றத்திற்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது. அந்நாட்டு பிரதமர் ரிஷி சுனக்கின் கன்சர்வேட்டிவ் கட்சி மற்றும் தொழிலாளர் கட்சி இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது.
கன்சர்வேடிவ் கட்சி சார்பில் தற்போது பிரிட்டன் பிரதமராக ரிஷி சுனக் இருந்து வருகிறார். அவரே அக்கட்சியின் சார்பில் பிரதமர் வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ள நிலையில், தொழிற்கட்சி சார்பில் கீர் ஸ்டார்மர் பிரதமர் வேட்பாளராக நிற்கிறார். இதில் ரிஷி சுனக் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்.
லண்டன் நகரில் குரோய்டன் மேற்குத் தொகுதியில் லிபரல் டெமாக்ரட்ஸ் கட்சி சார்பில் எம்.பி பதவிக்குப் போட்டியிடும் இவர், கொள்ளிடத்தில் பிறந்தவர். 30 ஆண்டுகளுக்கு முன்பு லண்டன் சென்ற ஜாஹிர் உசேன், அங்கு கணினி நிறுவனம் நடத்துகிறார்.
மேலும் இந்த தேர்ததில் தமிழ்நாட்டைச் சேர்ந்த உமா குமரன், கவின் ஹரன், மயூரன் செந்தில் நாதன், கமலா குகன், டெவினா பால், நரணி ருத்ரா ராஜன், கிரிஷ்ணி, ஜாஹிர் உசேன் ஆகிய 8 தமிழர்கள் களத்தில் உள்ளனர்.
சீர்காழியில் பிறந்து இங்கிலாந்தில் கணினி நிறுவனம் நடத்தி வரும் ஜாஹிர் உசேன், லிபரல் டெமாக்ரட்ஸ் கட்சி சார்பில் குரோய்டன் மேற்கு தொகுதியில் போட்டியிடுகிறார்.
Tags: வெளிநாட்டு செய்திகள்
