Breaking News

தமிழ்நாட்டில் புதிதாக 5 தனியார் மருத்துவக் கல்லூரிகளை தொடங்க மத்திய அரசு அனுமதி

அட்மின் மீடியா
0

தமிழ்நாட்டில் 5 தனியார் மருத்துவக் கல்லூரிகளை தொடங்க மத்திய அரசு அனுமதி 

நாடு முழுவதும் புதிதாக 113 தனியார் மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

அந்த வகையில் தமிழ்நாட்டில் புதிதாக 5 தனியார் மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்க தேசிய மருத்துவ ஆணையத்திடம் (என்எம்சி) விண்ணப்பம் அளிக்கப்பட்ட நிலையில், அவற்றை ஆய்வு செய்து அதன்பேரில் இறுதி முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் ஓங்கூா் கிராமத்தில் தக்ஷசீலா மருத்துவக் கல்லூரி, 

விழுப்புரம் மாவட்டம், அவனம்பட்டில் ஜே.ஆா். மருத்துவக் கல்லூரி, 

விருதுநகா் மாவட்டம் கிருஷ்ணன்கோவில் பகுதியில் கலசலிங்கம் மருத்துவக் கல்லூரி, 

காஞ்சிபுரம் மாவட்டம் பென்னலூரில் அன்னை மருத்துவக் கல்லூரி, 

கன்னியாகுமரி மாவட்டம் கல்குளத்தில் கன்னியாகுமரி மருத்துவ ஆராய்ச்சி மிஷன் கல்லூரி 

அமைக்க அனுமதி கோரி விண்ணப்பிக்கப்பட்டதில் தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback