Breaking News

வணிகக் கட்டடங்களுக்கு, கட்டட முடிவு சான்று பெறுவதிலிருந்து விலக்களிப்பு - வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை

அட்மின் மீடியா
0

கட்டட முடிவு சான்று பெறுவதிலிருந்து விலக்களித்தல் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை - செய்தி வெளியீடு

தமிழ்நாடு ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் கட்டட விதிகள். 2019-இல் அனைத்து வகையான வணிகக் கட்டடங்களும் கட்டட முடிவு சான்றிதழ் கட்டாயமாக பெறப்பட வேண்டும் என்ற நிலை உள்ளது. 

இதனால் சிறு வணிகர்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளானதால், சிறு வணிகர்களின் நலன் கருதி, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 21.06.2024 அன்று மாண்புமிகு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்டபடி சிறு வணிகர்கள் பயன்பெறும் வகையில் 300 சதுர மீட்டர் மொத்த கட்டட பரப்பளவிற்குள் 14 மீட்டர் உயரத்திற்குள் அமையும் வணிகக் கட்டடங்களுக்கு, கட்டட முடிவுச் சான்றிதழ் பெறுவதிலிருந்து விலக்கு அளித்து அரசாணை எண்.123 வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி (ந.வ.4(1)) துறை நாள் 28.06.2024-இல் அரசு ஆணையிட்டுள்ளது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback