Breaking News

சென்னையில் பட்டப்பகலில் பிரபல யூடியூபருக்கு மிரட்டல் வைரல் வீடியோ 3 பேர் கைது முழு விவரம்

அட்மின் மீடியா
0

சென்னையில் பட்டப்பகலில் பிரபல யூடியூபருக்கு மிரட்டல் வைரல் வீடியோ 3 பேர் கைது முழு விவரம்

பிரபல யூடியூபர் A2D நந்தகுமாரிடம் மதுபோதையில் தகராறு செய்து கேமராவை பறித்த 3 பேரை போலீசார் கைது செய்தனர் எலெக்ட்ரானிக் பொருள் வாங்கச் சென்றபோது நடந்த சம்பவத்தை சமூக வலைத்தளத்தில் வீடியோவாக பதிவிட்டிருந்தது வைரலானதைத் தொடந்து ஸ்ரீதர், பார்த்திபன், கிஷோர் ஆகியோரை போலீஸ் கைது செய்துள்ளது.

சென்னையில் தொழில்நுட்ப சாதனங்கள், கேட்ஜெட்கள் விற்கப்படும் இடமான ரிட்ச்சீ ஸ்ட்ரீட்டுக்கு தனது நண்பருடன் வீடியோ Vlog பதிவு செய்யச் A2D சேனல் நந்தா சென்றுள்ளார். அப்போது, அங்கு போதையில் இருந்த ரவுடிகளால் மிரட்டப்பட்டுள்ளார்.Vlog-ல் அவர்கள் பேசிக்கொண்டே சென்றபோது வந்த நபர் ஒருவர், அவர்களை மறித்து, என் கூட வாங்க.. நான் யார் தெரியுமா.. நிஜமான ரவுடி.. ம்ம்ன்னு சொன்னா வந்துருவானுங்க இப்போ.. என மிரட்டும் வகையில் பேசியுள்ளார். 

வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

https://x.com/deepanpolitics/status/1809856552305676537

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback