ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கில் மேலும் 3 பேர் அதிரடியாக கைது!
தமிழக பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் (வயது 52). இவர் சென்னை பெரம்பூர் பகுதியில் வசித்து வருகின்றார்
நேற்று முன்தினம் மாலை இங்கு வந்திருந்த ஆம்ஸ்ட்ராங்கை மர்ம கும்பலினர் அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்தனர்.உடனடியாக ஆம்புலன்ஸ் மூலமாக கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு அவரை அழைத்துச் சென்ற நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதைத் தொடர்ந்து கொலையாளிகளை பிடிக்க 5 தனி பிரிவு அமைக்கப்பட்டு காவல்துறையினர் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்கள் மூலம் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
கொலையாளிகள் பயன்படுத்திய பட்டா கத்தியை சம்பவ இடத்தில் கிடந்த நிலையில் அதனைக் கைப்பற்றி தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் சம்பவத்தில் தொடர்புடைய ஆற்காட்டு சுரேஷின் தம்பி பாலு உள்ளிட்ட 8 பேர், கைது செய்யப்பட்டுள்ளார்கள்
இது தொடர்பாக சென்னை வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் அஸ்ரா கார்க் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது
பகுஜன் சமாஜ் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலையில் தற்போது 8 நபர்களை கைது செய்து தீவிர விசாரணை செய்து வருகிறோம். விசாரணைக்கு பின்னர் தான் கொலையின் நோக்கம் என்ன என்பது குறித்து தெரியவரும்.
கொலை சம்பவம் நடந்து நான்கு மணி நேரத்தில் 8 நபர்களை கைது செய்து உள்ளோம் கொலையின் உண்மையான காரணம் குறித்து விசாரணை நடத்தப்படும். கைதானவர்கள் பெயர் விவரங்களை தற்போது தெரிவிக்க முடியாது.' என தெரிவித்தார்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு கைதானவர்கள் ஆற்காடு சுரேஷ் சகோதரர் பொன்னை பாலு, ராமு, திருவேங்கடம், திருமலை, செல்வராஜ், மணிவண்ணன், சந்தோஷ், அருள் உள்ளிட்ட எட்டு நபர்களையும் ரகசிய இடங்களில் வைத்து காவல்துறை தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றார்கள் இந்நிலையில், பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.சந்தேகத்தின் அடிப்படையில் விஜய், கோகுல் மற்றும் சிவசக்தி ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளதாக தகவல்
Tags: அரசியல் செய்திகள் தமிழக செய்திகள்
