மூளையைத் தின்னும் அமீபாவால் கேரளாவில் 3 பேர் பலி.. தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
மூளையைத் தின்னும் அமீபாவால் கேரளாவில் 3 பேர் பலி.. மக்கள் நல்வாழ்வுத்துறை வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
கேரளாவில் கடந்த மாதங்களில் மூளையைத் தின்னும் அமீபாவால் 3 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோழிக்கோட்டைச் சேர்ந்த 7 ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் மிருதுல், குளத்தில் குளித்த பிறகு அவருக்கு தலைவலி மற்றும் வாந்தி ஏற்பட்டுள்ளது. மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார் ஆனால் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் மூளையைத் தின்னும் அமீபாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். அவர் கடந்த ஜூன் 24 ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
அடுத்ததாக கண்ணூரை சேர்ந்த 13 வயதான தாக்ஷினா, மூளையைத் தின்னும் அமீபாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த ஜூன் 12 ஆம் தேதி உயிரிழந்தார். தாக்ஷினா மூணாறுக்கு சுற்றுலா சென்று, அங்கு நீச்சல் குளித்தில் குளித்தபோது இந்த அமீபா தொற்று ஏற்பட்டது தெரியவந்துள்ளது.
அதேபோல் மலப்புரத்தைச் சேர்ந்த 5 வயதான ஃபட்வா கடந்த மே 1 ஆம் தேதி தனது வீட்டின் அருகே உள்ள ஆற்றில் உறவினர்களுடன் குளித்துள்ளார். இதனால் மே 10 ஆம் தேதி அவருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.
இந்நிலையில் அனைத்து மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கும் பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் கடிதம்“ ‘அமீபிக் மெனிங்கோ என்செபாலிடிஸ்’ என்னும் மூளையை அரிக்கும் நோய் தொற்று தொடர்பான உயிரிழப்புகள் கேரளாவில் நிகழ்ந்ததை கருத்தில் கொண்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்
இது குறித்து வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்:-
தேங்கியிருக்கும் நீரில் குளிப்பதை பொதுமக்கள், குழந்தைகள் தவிர்க்க வேண்டும் எனவும்நீர் நிலைகள், குளங்கள் ஏரிகளில் சுற்றுச்சூழல் சுகாதாரம் பேணப்பட வேண்டும் எனவும் தனியார், உள்ளாட்சி அமைப்புகளின் நீச்சல் குளங்களில் போதுமான குளோரினேஷன் பராமரிக்கப்பட வேண்டும் எனவும் மூளையை தின்னும் அமீபா குறித்து அனைத்து மாநகராட்சி சுகாதார அலுவலர்களுக்கும் மக்கள் நல்வாழ்வுத்துறை அறிவுறுத்தல் வழங்கியுள்ளது
Primary Amoebic Meningo-Encephalitis (PAM), is an almost Invariably fatal infection of the brain by the eukaryote Naegleria fowleri. Symptoms include meningitis-like headache, fever, nausea, vomiting, stiff neck, confusion, hallucinations and seizures. In view of the recent cases reported from Kerala, the following instructions are issued from this Directorate for strict adherence;
1. Public particularly Children should be strictly advised not to use the stagnant/ pollute
5. All the Government and Private medical practitioners are to be given advisory to look for suspected cases based on the history and symptoms. Suspected cases should be immediately referred to Tertiary care centres for management.d/ dirty water for swimming, bathing through local bodies concerned.
2. Environmental sanitation should be ensured around the stagnant water bodies, ponds, lakes etc.
3. Swimming pool sanitation should be ensured as per the public health guidelines. Adequate chlorination should be maintained in the swimming pools owned by private or local bodies concerned and the concerned local health authorities should ensure the chlorination levels of more than 2 ppm in High risk areas as the organism cannot survive in this environment.
4. Local bodies are to be instructed to keep the water bodies clean and restrict the entries in the water bodies.
Tags: தமிழக செய்திகள்
