Breaking News

மோடி 3.0 பட்ஜெட் கூட்டத்தொடர் ஜூலை 22 முதல் ஆகஸ்ட் 12 வரை நடைபெறும் மத்திய அரசு அறிவிப்பு

அட்மின் மீடியா
0

மோடி 3.0 பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் ஜூலை 22 முதல் ஆகஸ்ட் 12 வரை நடைபெறும் என மத்திய அரசு அறிவிப்பு

பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் ஜூலை 22 முதல் ஆகஸ்ட் 12 வரை நடைபெறும் என மத்திய அரசு அறிவிப்பு

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 7-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ளார்

 

இது தொடர்பாக மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:-

மத்திய அரசின் பரிந்துரைப்படி பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத்தொடரை ஜூலை 22 முதல் ஆக., 12 வரை நடத்துவதற்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்து உள்ளார். 

2024 - 25ம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட் 23ம் தேதி லோக்சபாவில் தாக்கல் செய்யப்படும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் மூன்றாவது முறையாக தேஜ கூட்டணி அரசு அமைந்த பிறகு, தாக்கல் செய்யப்படும் முழு நேர பட்ஜெட் இதுவாகும். நிர்மலா சீதாராமன் ஏழாவது முறையாக மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார்.

மத்திய அரசின் 2024-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மோடி 3.0 அரசின் கீழ் நிதியமைச்சர் வரி செலுத்துவோருக்கு சில சலுகைகள் அறிவிக்கலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback