3 புதிய குற்றவியல் சட்டங்களை அமல்படுத்த தடை விதிக்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு
அட்மின் மீடியா
0
மத்திய அரசின் 3 புதிய குற்றவியல் சட்டங்களை அமல்படுத்த தடை விதிக்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
தூத்துக்குடியைச் சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்தி, சமஸ்கிருதம் தெரியாத வழக்கறிஞர்கள், நீதிபதிகளுக்கு இந்த சட்டங்கள் பாதிப்பை ஏற்படுத்தும். இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஆங்கிலத்தில் மட்டுமே சட்டங்கள் இயற்ற அதிகாரம் வழங்குகிறது எனவும் புதிய சட்டங்களுக்கு இந்தி மற்றும் சமஸ்கிருதத்தில் பெயரிடப்பட்டுள்ளது இந்திய அலுவல் மொழி சட்டம் 1963 மற்றும் தமிழ்நாடு அலுவல் மொழி சட்டம் 1956 ஆகியவற்றிற்கு எதிரானது என அதில் தெரிவித்துள்ளார்Tags: தமிழக செய்திகள்
