இந்த வருடம் முதல் ஹஜ் பயணிகளுக்கு ரூ.25,000 இணை மானியம் - தமிழக அரசு அறிவிப்பு
இந்த வருடம் முதல் ஹஜ் பயணிகளுக்கு ரூ.25,000 இணை மானியம் - தமிழக அரசு அறிவிப்பு
ஹஜ் பயணம் மேற்கொள்வோருக்கு 25 ஆயிரம் ரூபாய் இணை மானியமாக வழங்கப்படும் என அமைச்சர் செஞ்சி மஸ்தான் அறிவித்துள்ளார்.
ஹஜ் பயணம் மேற்கொள்ளும் ஒவ்வொரு நபருக்கும் இந்த ஆண்டு முதல் தலா 25 ஆயிரம் ரூபாய் இணை மானியமாக வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அமைச்சா் செஞ்சி மஸ்தான் கூறும்போது, முதல் முறையாக ஹஜ் புனித பயணம் மேற்கொள்ளும் தகுதி வாய்ந்த பயணிகள் ஒவ்வொருவருக்கும் தலா ரூ.25 ஆயிரம் வழங்கப்படும் என்றும், சிறுபான்மையின மகளிருக்கு மின்மோட்டாருடன் கூடிய தையல் இயந்திரங்கள் ரூ.1.60 கோடி செலவில் வழங்கப்படும் என்றும், மக்கள் அதிகம் வரும் தொன்மையான 6 தர்காக்களில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்த 5 கோடி ரூபாய் வழங்குதல் போன்ற 10 புதிய அறிவிப்புகளை அறிவித்துள்ளார் என கூறினார்
Tags: தமிழக செய்திகள் மார்க்க செய்தி

