Breaking News

மத்திய அரசின் கல்வி உதவித் தொகை ரூ.25,000 பெற விண்ணப்பிக்கலாம் யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் முழு விவரம் ministry of labour and employment scholarship

அட்மின் மீடியா
0

மத்திய அரசின் கல்வி உதவித் தொகை ரூ.25,000 பெற விண்ணப்பிக்கலாம் யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் முழு விவரம்

மத்திய அரசின் தொழிலாளர், வேலைவாய்ப்பு அமைச்சகம் சார்பில் பீடி, சுண்ணாம்புக் கல் டோலமைட் சுரங்கத் தொழிலாளர்கள், சினிமா தொழிலா ளர்களின் குழந்தைகளுக்கு ஒன்றாம் வகுப்பு முதல் தொழில் முறை படிப்புகள் வரை ரூ.1,000 முதல் ரூ.25,000 வரை கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வரு கிறது.

2024-2025 ஆம் நிதியாண் டில் இந்த கல்வி உதவித்தொகை பெற்றிட மின்னணு முறையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்ப டுகின்றன. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை https://scholarships.gov.in எனும் தேசிய கல்வி உதவித்தொகை வலைத்தளத்தில் ஒவ்வொரு மாணவரும் தங்களுக் கென தனியாக தேசியமயமாக்கப்பட்ட வங்கியின், மைய வங்கி அமைப்பு எனும் தொழில்நுட்ப முறையில் தங்களது சேமிப்புக் கணக்கானது, தேசிய மின்னணு பரிவர்த்தனை வசதிகளை பெற்றி ருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் தங்களது ஆதார் எண்ணை வங்கி சேமிப்பு வங்கி கணக்குடன் இணைத்தி ருந்தால் மட்டுமே கல்விஉதவித் தொகை பெற்றிட தகுதியுடைய வராக கருதப்படுவர். இத்திட்டத் தின்கீழ் கல்வி உதவித்தொகை பெறுவதற்கு விண்ணப்பதாரர்கள் தங்களது ஆதார் எண்ணை பயன்படுத்துவதற்கு மின்னணு முறையில் ஒப்புதல் வழங்க வேண் டும்.

மேலும், கல்வி நிறுவனங்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமா னதாகும். பதிவு செய்யப்படாத பள்ளிகள், கல்லூரிகள் https://s cholarships.gov.in என்ற, தேசிய கல்வி உதவித்தொகை வலைத்தளத்தில் முதலில் பதிவுசெய்திட வேண்டும். பின்னர், குறிப்பிடப் பட்டுள்ள வழிகாட்டுதல்களின் படி அனைத்து விண்ணப்பங் களையும் ஆராய்ந்து, ஒப்புதல் வழங்கி தங்களது கல்விநிறுவனங் களின் பதிவு செய்யப்பட்ட முகவ ரியில் இருந்து சமர்ப்பிக்க வேண்டும்.

1-ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள்ளாகவும், மற்ற அனைத்து உயர்கல்வி மாணவர்களும் அக் டோபர் 31-ஆம் தேதிக்குள்ளாகவும் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். மேலும் விவரங்கள் பெற மத்திய நலஆணை யர் அலுவலகம், தொழிலாளர் நல அமைப்பு, தரைத்தளம், சிட்கோ நிர்வாக கிளை அலுவலக வளாகம், திரு.வி.க.தொழில் பூங்கா, கிண்டி, சென்னை 600 032. என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

முழு விவரம் தெரிந்து கொள்ள இங்கு கிளிக் செய்யவும்:-

https://scholarships.gov.in/public/schemeGuidelines/Labour_Ministry_Guidelines_of_scholarhsips%20schemes.pdf

Tags: கல்வி செய்திகள் முக்கிய அறிவிப்பு முக்கிய செய்தி

Give Us Your Feedback