Breaking News

வேலைப்பளு காரணமாக 2 வது மாடியில் இருந்து விழுந்து உலகின் முதல் ரோபோ தற்கொலை நடந்தது என்ன முழு விவரம்

அட்மின் மீடியா
0

வேலைப்பளு காரணமாக மாடியில் இருந்து விழுந்து உலகின் முதல் ரோபோ தற்கொலை நடந்தது என்ன முழு விவரம்

தென்கொரியாவில் தொடர்ச்சியாக வேலை செய்து கொண்டிருந்த ரோபோ வாழ்க்கையை வெறுத்து திடீரென தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தைச் சேர்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனத்தால் இந்த ரோபாட் தயாரிக்கப்பட்டது. 

தென்கொரியாவில் உள்ள குமி சிட்டி கவுன்சில் அலுவலகத்தில் இது பணிக்கு நியமனம் செய்யப்பட்டது.தினசரி அதிகாரிகளுக்கு ஆவணங்களை வழங்குவது, உள்ளூர்வாசிகளுக்கு உதவுவது உட்பட பல முக்கிய பணிகளை இந்த ரோபோ செய்து வந்தது

மேலும் இந்த ரோபோவிற்க்கு சொந்த அடையாள அட்டை இருந்தது. அதன் பணி நேரம் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை ஆகும்.மற்ற ரோபோக்களைப் போலின்றி, இந்த ரோபாட் பொதுவாக ஒரு தளத்தை மட்டுமே பயன்படுத்தாமல் பல தளங்களுக்கு செல்லக்கூடியது ஆகும். குமி சிட்டி கவுன்சில் கட்டடத்தின் லிஃப்ட்டை பயன்படுத்தி அந்த ரோபாட் பல தளங்களுக்கு செல்லும். திறன் வாய்ந்தது

வழக்கத்திற்கு மாறாக திடீரென சமீபத்தில் இந்த ரோபோ கட்டிடத்தின் ஒரே இடத்தை சுற்றி வந்துள்ளது.  டென்ஷனாக இங்கும் அங்கும் நடந்ததாகவும் கூறப்படுகின்றது திடீரென இந்த ரோபோட் 2வது மாடியில் இருந்து கீழே விழுந்து நொறுங்கிவிட்டது. இந்த செய்தி உலகளவில் வேகமாக பரவியது. ரோபோவின் இந்த செயலுக்கான சரியான காரணம் இன்னும் தெரியவில்லை. 

ஆனால், சிதறிக்கிடந்த பாகங்களை நிறுவனம் ஆராய்ந்த பிறகு மட்டுமே உண்மை தெரியக்கூடும் என்று இந்த ரோபோட்டை உருவாக்கியுள்ள நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, சமூக வலைத்தளங்களில் ரோபோட் அதிக வேலை பளு காரணமாகத்தான் தற்கொலை செய்துகொண்டது என்று பலர் அவர்களின் கருத்துக்களை பதிவு செய்துள்ளனர். 

ரோபோவாக இருந்தாலும் ரெஸ்ட் இல்லாமல் பயன்படுத்தினால், இதான் நிலைமை என்றும் சிலர் கமெண்ட் செய்துள்ளனர்.  சமூக வலைதளங்களிலும் பலர் அதற்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மேலும், சிலரோ ஓய்வின்றி, விடுமுறையின்றி, எந்த பலனும் இன்றி ரோபாட்கள் வேலை பார்ப்பதால் வந்த வினை, என பதிவிட்டுள்ளார்கள்.

Tags: தொழில்நுட்பம் வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback