Breaking News

பெண்கள் ஆட்டோ வாங்க ரூ 1 லட்சம் மானியம் பெற விண்ணப்பிப்பது எப்படி

அட்மின் மீடியா
0

சென்னை மாநகரத்தில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்திடும் விதமாகவும், பெண்களுக்கான சுயதொழில் வேலைவாய்ப்பினை உருவாக்கிடும் விதமாகவும் அரசு மானியமாக தலா 1 இலட்சம் விதம் 200 பெண் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு மானியம் வழங்கப்பட்டு, 'பிங்க் ஆட்டோ'ஸ் இயக்கம் திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது


தமிழ்நாடு சட்டப்பேரவையின் மாலை நேர நிகழ்வுகள் தொடங்கி உள்ளது. இதில், வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை, மாற்றுத்திறனாளிகள் துறை, சமூக நலன் மற்றும் மகளிர் நலன் துறை உள்ளிட்ட துறைகளில் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.இதற்கு துறை அமைச்சர்கள் முத்துசாமி, கீதாஜீவன் ஆகியோர் பதிலளித்து புதிய அறிவிப்புகளையும் வெளியிட்டு வருகின்றனர்.

வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள 200 பெண்களுக்கு சுய தொழில் செய்ய ஐம்பதாயிரம் ரூபாய் வீதம் ஒரு கோடி ரூபாய் மானியம் வழங்க சமூக நலன் மற்றும் மகளிர் மேம்பாட்டு துறை அறிவிப்புகளை அந்த துறையின் அமைச்சர் கீதாஜீவன் கூறியுள்ளார்

புதிய ஆட்டோ வாங்குவது எப்படி:-

மோட்டார் வாகனத் துறையிலும் பெண்கள் தங்கள் முத்திரையைப் பதிக்கவும், பொருளாதார நிலையை மேம்படுத்தவும், திராவிட மாடல் அரசு புதிய திட்டம் ஒன்றைக் கொண்டு வந்துள்ளது. தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையின் கீழ் செயல்படும். 'தமிழ்நாடு அமைப்பு சாரா ஓட்டுநர்கள், தானியங்கி மோட்டார் வாகனங்கள் பழுதுபார்க்கும் தொழிலாளர்கள் நலவாரியம்' மூலம் பெண் ஆட்டோ ஓட்டுநர்கள் புதிய ஆட்டோ வாங்க ரூ.1 லட்சம் மானியம் அளிக்கும் திட்டத்தை தமிழ்நாடு அமைப்பு சாரா தொழிலாளர்களின் சமூகப் பாதுகாப்பை உறுதிசெய்யவும். அவர்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், தமிழக அரசால் 18 நலவாரியங்கள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. 

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு அமைப்பு சாரா ஓட்டுநர்கள். தானியங்கி மோட்டார் வாகனங்கள் பழுதுபார்க்கும் தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு செய்துள்ள பெண் ஆட்டோ ஓட்டுநர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். சம்பந்தப்பட்ட வாரியத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட தொழிற்சங்கத்தின் தலைவர் அல்லது பொதுச் செயலாளர் / தொழிலாளர் உதவி ஆய்வாளர் / கிராம நிர்வாக அலுவலர் / வருவாய் ஆய்வாளர் ஆகியோரிடமிருந்து பணிச் சான்றிதழ் பெற்று (பரிந்துரைக்கப்பட்ட வடிவத்தில்) பதிவேற்ற வேண்டும்.

சென்னை மாவட்டத்திற்கு வருவாய் ஆய்வாளர் கையொப்பமும் பிற மாவட்டத்திற்கு கிராம நிர்வாக அலுவலர் கையொப்பமும் பெற்று பதிவேற்ற வேண்டும்.

அடையாளச் சான்றுகளாக ஓட்டுநர் உரிமம், பள்ளிச் சான்றிதழ், வாக்காளர் அடையாள அட்டை, பதிவுசெய்யப்பட்ட மருத்துவர் சான்றிதழ் அல்லது அரசு மருத்துவ மனையின் சிவில் சர்ஜன் பதவிக்குக் குறை வில்லாத மருத்துவ அலுவலரின் சான்றிதழ் ஆகியவற்றைப் பதிவேற்ற வேண்டும்.

நீண்ட காலமாக ஓட்டுநராக இல்லாத பெண்களும், நலவாரியத்தில் பதிவு செய்யலாம். வேறு வாரியங்களில் பதிவு செய்துள்ள பெண்களும், ஆட்டோ ஓட்டுநராக விருப்பம் இருந்தால், வாரியத்தினை மாற்றிக்கொண்டு புதிய ஆட்டோ வாங்க மானியத்துக்கு விண்ணப்பிக்கலாம். 

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback