Breaking News

வெட்டுக்கிளி, புழு ,பூச்சி உள்ளிட்ட 16 பூச்சியினங்களை உணவாக உட்கொள்ள சிங்கப்பூர் அரசு அனுமதி!முழு விவரம் Singapore approves 16 insects for human consumption

அட்மின் மீடியா
0

வெட்டுக்கிளி, புழு ,பூச்சி உள்ளிட்ட 16 பூச்சியினங்களை உணவாக உட்கொள்ள சிங்கப்பூர் அரசு அனுமதி!முழு விவரம்

வெட்டுக்கிளிகள், பட்டுப்புழுக்கள் உள்ளிட்ட 16 பூச்சியினங்களை மனிதர்கள் உட்கொள்வதற்குச் சிங்கப்பூரில் உள்ள உணவுக் கழகம் (எஸ்.எப்.ஏ) ஒப்புதல் அளித்துள்ளது



விற்பனையை அதிகரிக்க மற்றும் வாடிக்கையாளர்களை கவர இந்த பூச்சிகள் அடங்கிய புதிய மெனுக்கள் உதவும் என உணவு விடுதிகள் மற்றும் கபேக்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றன. ஒரு சில உணவு விடுதிகள் 30 பூச்சிகள் அடங்கிய டிஷ்களையும் மெனுவில் சுட்டி காட்டியுள்ளது.

அவற்றை சமைத்து, கடல்உணவுகளுடன் சேர்த்து புதிய டிஷ்ஷாகவும் விற்பனைக்கு கொண்டு செல்லப்படும் என உணவக உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

 சீனா, தாய்லாந்து நாடுகளிலிருந்து பூச்சிகளை இறக்குமதி செய்யவும் திட்டம். 30 வயதுக்கு உட்பட்ட இளைஞர்களே அதிக தைரியத்துடனும், ஆர்வத்துடனும் முன்வந்து இந்த வகை உணவுகளை வாங்கிச் சாப்பிடுவதாக உணவக உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதனை தொடர்ந்து உணவக உரிமையாளர்கள் சீனா, தாய்லாந்து மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளில் உள்ள பண்ணைகளில் இருந்து பூச்சிகளை பெறுவதற்கான பணிகளை தொடங்கியுள்ளனர்.எனினும், இவ்வகை பூச்சிகள், உணவு பாதுகாப்பு கட்டுப்பாட்டு விதிகளுக்கு கட்டாயம் உட்பட்டு இருக்க வேண்டும். உணவு பாதுகாப்பு விதிகளுக்கு உட்படாத பூச்சிகள், அவற்றின் பொருட்கள் அடங்கிய பேக்குகள் விற்பனைக்கு அனுமதிக்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது

Tags: வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback