உபி ஹத்ராஸ் மத வழிபாட்டுக் கூட்ட நெரிசலில் சிக்கி 100க்கும் மேற்பட்டோர் பேர் பலி நடந்தது என்ன முழு விவரம்
உபி ஹத்ராஸ் மத வழிபாட்டுக் கூட்ட நெரிசலில் சிக்கி 100க்கும் மேற்பட்டோர் பேர் பலியாகிஉள்ளார்கள். நடந்தது என்ன முழு விவரம்
உபியில் உள்ள ஹத்ராஸ் மத வழிபாட்டுக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 120-ஐ கடந்தது
உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் பகுதியில் நடந்த மத நிகழ்வின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 100க்கும் மேற்பட்டோர் பலியாகினர் என அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது
உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் மத போதகர் போலே பாபாவின் சத்சங்க கூட்டம் இன்று 02.07.2024 செவ்வாய்க்கிழமை நடைபெற்ற போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி பெண்கள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
ஹத்ராஸ் மாவட்டத்தின் சிகந்த்ரா ராவ் பகுதியில் உள்ள ரதி பன்பூர் கிராமத்தில் பிரத்யேகமாக போடப்பட்ட கூடாரத்தில் மத போதகர் ஒருவர் தனது சீடர்களுடன் உரையாடிக் கொண்டிருந்த போது இந்த சம்பவம் நடந்துள்ளது.
அதிகமான மக்கள் கலந்து கொண்டதால் அங்கு மூச்சுத் திணறல் ஏற்படுத்தியது இதனால் ஏற்பட்ட அசௌகரியத்தை தொடர்ந்து, மக்கள் ஓடத் தொடங்கியதால், கூட்ட நெரிசல் ஏற்பட்டது இந்த கூட்ட நெரிசலில் சிக்கி பெண்கள் முதியவர்கள் எல்லோரும் ஒருவர் மீது ஒருவர் விழுந்து, நெரிசல் ஏற்பட்டது எனவும் இதனால் பலர் மயக்கமடைந்தார்கள் எனவும் இதில் கூட்டநெரிசலில் சிக்கி சுமார் 100க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளார்கள்
தகவல் அறிந்து சம்பவ இடம் வந்த காவல்துறையினர், மற்றும் தீயனைப்பு படை வீரர்கள் அனைவரும் மீட்பு பணிகள் நடத்தி வருகின்றார்கள், மேலும் மீட்கப்பட்ட பலர் அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். மீட்பு பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது, மேலும் பலி எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்
https://twitter.com/RoshniBhatt17/status/1808098372168884730
Tags: இந்திய செய்திகள்
