ஜூலை 1ம் தேதி முதல் அமலான புதிய குற்றவியல் சட்டங்கள் சிறப்பம்சங்கள் முழு விவரம்
ஜூலை 1ம் தேதி முதல் அமலான புதிய குற்றவியல் சட்டங்கள் சிறப்பம்சங்கள் முழு விவரம்
ஜூலை 1ம் தேதி முதல் இந்தியா முழுவதும் புதிய குற்றவியல் சட்டங்கள் அமலுக்கு வருகிறது. அதன்படி இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி), குற்றவியல் நடைமுறைச் சட்டம் (சிஆர்பிசி), இந்திய சாட்சியங்கள் சட்டம் உட்பட சட்டங்களுக்குப் பதிலாக பாரதிய நியாய சன்ஹிதா (பிஎன்எஸ்), பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா (பிஎன்எஸ்எஸ்), பாரதிய சாட்சிய அதினியம் ஆகிய 3 புதிய குற்றவியல் சட்டங்கள் நடைமுறைக்கு வருகின்றன.
இந்த சட்டங்கள் கடந்தாண்டு நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதியின் ஒப்புதலுக்குப் பிறகு மத்திய அரசின் அரசிதழில் வெளியாகியது
3 புதிய குற்றவியல் சட்டங்களும் நாளை ஜூலை 1 ம் தேதி திங்கட்கிழமை முதல் நடைமுறைக்கு வருகின்றன.
இந்த புதிய சட்டங்கள் குறித்த பல மாநிலங்களில் கண்டனம் தெரிவித்து வழக்கறிஞர்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஆனாலும் புதிய சட்டங்களை நாளை முதல் பாஜக அரசு அமல்படுத்த உள்ளது.
1860-ல் உருவாக்கப்பட்ட இந்திய தண்டனை சட்டம் (IPC), பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது BHARATIYA NAGARIK SURAKSHA SANHITA 2023
1872-ல் உருவாக்கப்பட்ட இந்திய சாட்சிகள் சட்டம் (IEA), பாரதிய சாக்ஷிய அதினியம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது BHARATIYA SAKSHYA ADHINIYAM 2023
1898-ம் உருவாக்கப்பட்ட குற்றவியல் நடைமுறை சட்டம் (CPC) பாரதிய நியாய சன்ஹிதா என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது BHARATIYA NYAYA SANHITA 2023
BHARATIYA NAGARIK SURAKSHA SANHITA 2023
BHARATIYA NYAYA SANHITA 2023
BHARATIYA SAKSHYA ADHINIYAM 2023
புதிய குற்றவியல் சட்டம் சிறப்பம்சங்கள்:-
புதிய குற்றவியல் சட்டங்கள் தொழில்நுட்பம் சார்ந்த நீதித்துறையை உறுதி செய்கிறது. நாட்டின் எந்த ஒரு காவல் நிலையத்திலும் நீங்கள் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யலாம். குற்றச்சம்பவம் குறித்து எந்த காவல் நிலையத்திலும் புகார் அளிக்கலாம், மேலும் புகார்தாரருக்கு எப்ஐஆர் நகல் வழங்குவது கட்டாயம் ஆகும்
காவல்துறையினர் விளக்கமளிக்காமல் ஒருவரை 24 மணி நேரத்திற்கு மேல் விசாரணையில் வைத்திருக்க முடியாது.குற்றத்தைத் தடுப்பதற்காக காவல் துறையினரால் கைது செய்யப்பட்ட நபரை 24 மணி நேரத்திற்கு மேலாக விசாரணையில் வைப்பதை தடுக்க இந்திய நியாயச் சட்டத்தின் 170-வது பிரிவு வகை செய்கிறது.
கைது செய்யப்பட்ட நபரை நீதிமன்ற எல்லையைப் பொருட்படுத்தாமல் எந்த நீதிமன்றத்திலும் ஆஜர் படுத்தலாம்
சாட்சிகள் காணொலி காட்சி மூலம் ஆஜராகலாம்.புதிய குற்றவியல் சட்டங்களில் ஆதாரங்களின் வரையறைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. மின்னணு வகையில் இருக்கும் டிஜிட்டல் ஆதாரங்கள் இணைக்கப்பட்டுள்ளன. குற்றவாளிகள், சாட்சிகள், வல்லுனர்கள் டிஜிட்டல் முறையில் ஆஜராக முடியும்
பெண்களை திருமணம் செய்துகொள்வதாக பொய்யான வாக்குறுதியளித்து அவர்களுடன் உடலுறவில் ஈடுபடுவது, குற்றமாகும்.
புதிய குற்றவியல் சட்டங்களில், குழந்தைகளையும் அவர்களின் குழந்தைப்பருவத்தையும் பாதுகாக்க சிறப்புக் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. 18 வயதுக்குட்பட்ட சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை குற்றங்களுக்கு மரண தண்டனை வழங்கும் சட்டப்பிரிவு உள்ளது.
குழந்தைகளை குற்றம் செய்ய வைப்பது அல்லது குற்றச் செயல்களில் ஈடுபடுத்துவது தண்டனைக்குரிய குற்றமாகும்.
ஆண்/பெண் குழந்தையை வாங்குவதும் விற்பதும் கொடூர் குற்றமாகும்.
18 வயதுக்குட்பட்ட சிறுமியைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்தால் ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனை விதிக்கப்படும்.
மேலும் எப் ஐ ஆர் போடப்பட்ட 90 நாட்களுக்குள் போலீசார் விசாரணையை முடிக்க வேண்டும் அதே சமயம் புகார்தாரருக்கு விசாரணை விவரங்களை தெரிவிக்க வேண்டும் எனவும் சட்டம் இயற்ற்ப்பட்டுள்ளது
புதிய குற்றவியல் சட்டங்களில், சிறு குற்றங்கள் புரிவோரை சமூகப்பணிகளில் ஈடுபடுத்தும் சட்டப்பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளன.
சிறு குற்றங்களில்ஈடுபடுவோர் சமூகப் பணி செய்ய வகை செய்யும் நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது முதல் முறையாக, சமூகப் பணிகள் என்பது தண்டனையின் ஒரு வடிவமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது
6 வகையான சிறிய குற்றங்களில் ஈடுபடுவோரை சமூகப் பணிகளில் ஈடுபடுத்த வகை செய்யப்பட்டுள்ளது
திட்டமிட்ட குற்றம் பற்றி விளக்கப்பட்டுள்ளது, தேச துரோகம் என்பது இறையாண்மை மீறல் என மாற்றப்பட்டுள்ளது, கும்பல் கொலை' மற்றும் பற்றி இழுத்தல் குற்றப்பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளது, பயங்கரவாத செயலுக்கு விளக்கமளிக்கப்பட்டுள்ளது
புதிய குற்றவியல் சட்டங்கள், நீதிமன்ற நடைமுறைகளை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முடிக்கவும், விசாரணை முடிந்து 45 நாட்களுக்குள் தீர்ப்பு வழங்குவதையும் உறுதிசெய்கிறது.
நீதிமன்ற அழைப்பாணைகள் இனிமேல் மின்னணு முறையில் வழங்கப்படலாம். வழக்கு விசாரணைகளில் தேவையற்ற காலதாமதத்தைத் தவிா்க்கவும் சரியான நேரத்தில் நீதி வழங்கப்படுவதை உறுதிசெய்யவும் அதிகபட்சம் 2 ஒத்திவைப்புகளை மட்டுமே நீதிமன்றங்கள் அனுமதிக்கும்
புதிய குற்றவியல் சட்டங்களில் தொழில்நுட்பத்தின் புரட்சியுடன், இ-எஃப்ஐஆர், ஜீரோ எஃப்ஐஆர், டிஜிட்டல் குற்றப்பத்திரிகை ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளன. விசாரணை முதல் நீதிமன்ற நடைமுறைகள் வரை அனைத்தும் கணினி மயமாக்கப்பட்டுள்ளது.
போலீஸ் விசாரணை முதல் நீதிமன்றம் வரை முழு செயல்முறையையும் கணினிமயமாக்குதல்
ஜீரோ FIR, e-FIR, குற்றப்பத்திரிகை ஆகியவை இனி டிஜிட்டல் ஆகிவிடும்
7 ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட தண்டனை உள்ள வழக்குகளில் தடயவியல் விசாரணை கட்டாயமாகும்
போலீஸ் தேடுதல் செயல்முறை முழுவதையும் வீடியோ பதிவு செய்வது கட்டாயமாகும்
ஆவணங்களை நகல்களாக தாக்கல் செய்யலாம்
நிகழ்விடத்தில் விசாரணை, சோதனையை வீடியோ பதிவு செய்ய வேண்டும்
பாதுகாப்பு தேவைப்படும் சாட்சிகள் காவல் நிலையத்தை அணுகலாம்
கைது செய்யப்படும் நபரை 40-60 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க முடியும்
கொலை, பாலியல் வன்கொடுமை, அரசுக்கு எதிராக குற்றம் புரிந்தவர்களுக்கு கைவிலங்கு இட வழி வகை செய்யப்பட்டுள்ளது
Tags: இந்திய செய்திகள் தமிழக செய்திகள் முக்கிய செய்தி
