Breaking News

சீனா அருவியில் குழாயில் இருந்து கொட்டும் தண்ணீர் வைரல் வீடியோவால் சர்ச்சை Yuntai Waterfall

அட்மின் மீடியா
0

சீனாவில் உள்ள புகழ்பெற்ற அழகிய நீர்வீழ்ச்சி குழாயில் இருந்து தண்ணீர் வருவதைக் காட்டும் காணொளியை அடுத்து வைரலாகி வருகிறது

ஆசியாவின் மிக உயரமான நீர் வீழ்ச்சி என அறியப்படும் சீனாவின் Yuntai நீர் வீழ்ச்சியில், தண்ணீர் குழாயில் இருந்து கொட்டுவதை மலையேற்ற வீரர் ஒருவர் வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோடைக்காலத்தில் இங்கு வரும் சுற்றுலா பயணிகள் ஏமாறக் கூடாது என்பதற்காக செய்துள்ள ஏற்பாடு என தகவல்


சீனாவின் Yuntai மலை முகட்டில், 321 மீற்றர் உயரத்தில் இருந்து கொட்டும் அந்த அருவி உண்மையில் குழாய் பொருத்தப்பட்ட செயற்கை அருவி என மலையேறும் வீரர் ஒருவர் கண்டுபிடித்து அம்பலப்படுத்தியுள்ளார்.

ஆனால் Yuntai சுற்றுலா நிர்வாகம் இந்த விவகாரத்தில் புதிய விளக்கமளித்துள்ளது. மழை இல்லாத காலங்களில் சுற்றுலாப்பயணிகளை ஈர்க்கும் பொருட்டு உருவாக்கப்பட்டுள்ள சிறிய ஏற்பாடு அது என குறிப்பிட்டுள்ளனர்.


சீனாவின் மிக உயரமான நீர்வீழ்ச்சியில் இரகசியமாக குழாய் பதித்து அதில் இருந்து வரும் நீரை இயற்கையான அருவி என நம்பவைத்துள்ளார்கள் இதனை  மலையேறுபவர் ஒருவர் கண்டுபிடித்ததை அடுத்து, சீன அதிகாரிகள் மன்னிப்பு கேட்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

சீனாவில் உள்ள 1,024 அடி உயரமுள்ள யுண்டாய் மலை நீர்வீழ்ச்சிக்கு உலகம் முழுவது இருந்து பலர் வருகை தருகின்றனர், இந்த நீர்வீழ்ச்சி சீனாவின் ஹெனான் மாகாணத்தில் உள்ளது 

சுமார் 314 மீட்டர் செங்குத்து வீழ்ச்சியுடன் ஆசியாவிலேயே மிக உயரமான நீர்வீழ்ச்சி என அழைக்கப்படு இந்த நீர்வீழ்ச்சியில் தான் இது போல் நடந்துள்ளது

இது குறித்து பூங்கா  நிர்வாகம் யுண்டாய் மலையின் அழகிய பகுதி ஏழு மில்லியனுக்கும் அதிகமானவர்கள் கடந்த ஆண்டு வந்துள்ளார்கள், கோடை காலங்களில் வறண்டு தண்ணீர் இல்லாமல் போனால் பார்வையாளர்கள் ஏமாந்து செல்லகூடாது என்பதற்க்காக இந்த ஏற்பாடு என தெரிவித்துள்ளார்கள்

வீடியோ பார்க்க இங்கு கிளிக்இங்கு கிளிக் செய்யவும்

https://x.com/AzraUzerli5/status/1798678642068783226

வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

https://x.com/BangkokPostNews/status/1799029633821872343

Tags: வெளிநாட்டு செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback