அரசியலில் இருந்து விலகுவதாக வி.கே.பாண்டியன் அறிவிப்பு VK Pandian
அரசியலில் இருந்து விலகுவதாக பிஜு ஜனதா தள நிர்வாகியும், முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான வி.கே.பாண்டியன் அறிவிப்பு
ஒடிசா முன்னாள் முதலமைச்சர் நவீன் பட்நாயக்கிற்கு நெருக்கமான தலைவராக பிஜு ஜனதா தளம் கட்சியில் உருவெடுத்தவர் வி.கே.பாண்டியன்
நடந்து முடிந்த லோக்சபா தேர்தலுடன் இணைந்து ஒடிசாவில் சட்டசபைத் தேர்தலும் நடைபெற்றது. இதில் 24 ஆண்டுகளாக ஒடிசாவில் ஆட்சியில் இருந்து பிஜு ஜனதா தளம் கட்சி தோல்வியை தழுவியது.
இந்த தேர்தலில் பாஜக 78 இடங்களையும், பிஜு ஜனதா தளம் 51 இடங்களையும், காங்கிரஸ் கட்சி 14 இடங்களையும் பிடித்தது. தனி பெரும்பான்மைக்கு 74 இடங்களே போதும் என்ற நிலையில், பாஜக முதல்முறையாக ஆட்சியமைக்கவுள்ளது.
பிஜு ஜனதா தளம் கட்சியின் தோல்விக்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியும், நவீன் பட்நாயக்கின் உதவியாளருமான வி.கே.பாண்டியன் தான் காரணம் என்று விமர்சனங்கள் எழுந்தன
இந்நிலையில் அரசியலில் இருந்து விலகுவதாக பிஜு ஜனதா தள நிர்வாகியும், முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான வி.கே.பாண்டியன் அறிவித்துள்ளார்
நவீன் பட்நாயகிற்கு உதவவே நான் அரசியலுக்கு வந்தேன். பதவிக்காக நான் அரசியலுக்கு வரவில்லை. இன்று வரை என் மூதாதையர்களின் சொத்துக்கள் தான் என் வசம் உள்ளது. நான் IAS சேரும்போது இருந்த சொத்துக்களே, இப்போதும் என்னிடம் உள்ளது என கூறியுள்ளார்
Tags: அரசியல் செய்திகள் இந்திய செய்திகள்
