Breaking News

ரயில் நிலையங்களில் டிக்கெட் கொடுக்கும் உதவியாளர் பணி விண்ணப்பிப்பது எப்படி முழுவிவரம் Southern Railway Recruitment

அட்மின் மீடியா
0

ரயில் நிலையங்களில் பயணச் சீட்டு விற்பனையாளர் பணி விண்ணப்பிப்பது எப்படி முழுவிவரம் ATVM Job

சென்னை கோட்ட ரயில்நிலையங்களில் உள்ள தானியங்கி பயணச்சீட்டு வழங்கும் இயந்திரத்தில் பயணச் சீட்டு உதவியாளராக செயல் பட விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


பொதுமக்களுக்கு ரயில் பயண சீட்டு விற்க அனுமதிரயிலில் பயணம் செய்ய முன்பதிவு இல்லாத பயண சீட்டுகள், பயணச் சீட்டு அலுவலகங்கள், தானியங்கி இயந்திரங்கள், மொபைல் போன் செயலிகள் ஆகியவற்றின் மூலம் வழங்கப்படுகின்றன. 

தானியங்கி இயந்திரங்கள் மூலம் பயண சீட்டுகள் இதுவரை ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர்கள் மட்டுமே நியமனம் செய்து வந்தனர்

தற்போது பொதுமக்களும் ரயில் பயணச்சீட்டு விற்க தானியங்கி இயந்திரங்களில் உதவியாளர்களாக பணியாற்ற வாய்ப்பு தர ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

அதன்படி சென்னை சென்ட்ரல், எழும் பூர், தாம்பரம், அரக்கோணம், ஆவடி, செங்கல்பட்டு, பெரம் பூர், கூடுவாச்சேரி, திருத்தணி, கடற்கரை, வேளச்சேரி, கிண்டி, அம்பத்தூர், தரமணி, எண் ணூர், திருவொற்றியூர் என சென்னை கோட்டத்துக்கு உள்பட்ட அனைத்து ரயில்நிலை யங்களிலும் பயணச்சீட்டு உதவியாளர்களை பணியமர்த்த ரயில்வே முடிவெடுத்துள்ளது. 

தகுதிகள்:-

10 ம் வகுப்பு தேர்ச்சி பெற்ரு இருக்கவேண்டும்

இப்பணிக்கு 18 வயதுக்கு மேற்பட்டவர்களாக இருக்கவேண்டும்

ரயில் நிலையங்களுக்கு அருகில் வசிப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.

அவர்கள் விற்பனை செய்யும் பயணச்சீட்டுகளின் மொத்த மதிப்பில் மூன்று சதவீதம் கமிஷனாக வழங்கப்படும். 

இந்த உதவியாளர்கள் ஓராண்டு காலத்திற்கு பணி அமர்த்தப்படுவார்கள். 

இவர்களுக்கு ரயில்வே ஊழி யர்களுக்கு கிடைக்கும் அரசு சலுகைகள் எதுவும் கிடை யாது.

ஆர்வம் உள்ளவர்கள் www.sr.indianrailw ays.gov.in ளத்தில் ஜூன் 20-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணி செய்யும் ரயில்வே நிலையம்:-

Chennal Central

Chennai Egmore

Tambaram

Arakkonam

Avadi

Chengalpattu

Perambur

Mambalam

Guduvancheri

Perungalathur

Tiruttani

Tindivanam

Chennal Beach

Velacheri

Guindy

Pazhavanthangal

Ambattur

Taramani

Chepauk

Chintadripet

Tiruvallikeni

Chennal Fort

Nungambakkam

Saidapet

St. Thomas Mt

Pallavaram

Chrompet

Tambaram-

Sanitorium

Minambakkam

Chetpet

Tirusulam

Ponneri

Villivakkam

Ennroe

Athipattu

Basinbridge

Tiruniravur

Kavaralpettal

Thiruvottiyur

Vysarpadi

Thiruvanmlyur

மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்

https://sr.indianrailways.gov.in/sr/corrigendum/1717133614030_CORRIGENDUM%20TVM%20facilitator%20II%20phase.pdf

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback