இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் S.M.Backer மரணமடைந்தார். யார் இந்த எஸ்.எம்.பாக்கர் முழு விவரம் S.M.Backer died
இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் S.M.Backer மரணமடைந்தார். யார் இந்த எஸ்.எம்.பாக்கர் முழு விவரம் S.M.Backer died
தமுமுக என அழைக்கப்படும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் முஸ்லிம் மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காகத் 1995 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு இயக்கமாகும். இது 1995ஆம் ஆண்டில் ஆகத்து 1ம் தியதி பேரா. ஜவாஹிருல்லா, பி. ஜைனுல் ஆபிதீன், எஸ்.எம். பாக்கர், செ.ஹைதர்அலி, குணங்குடி ஹனீபா போன்றவர்களால் தொடங்கப்பட்டது.
இஸ்லாமியர்களின் உரிமைகளை மீட்பதற்க்காகவும் தொடங்கப்பட்ட இந்த இயக்கம் சிறிது காலத்தில் தமுமுக நிர்வாகிகளுடன் ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக அங்கிருந்து பிரிந்து பி. ஜெய்னுல் ஆபிதீன், எஸ்.எம். பாக்கர் உள்ளிட்டவர்கள் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் என்கிற பெயரில் ஓர் அமைப்பைத் 2004ஆம் ஆண்டு தொடங்கினர்.
அதன்பின்பு பி. ஜெய்னுல் ஆபிதீன் உடன் ஏற்பட்ட மோதலால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பில் இருந்து விலகிய எஸ்.எம்.பாக்கர் இந்திய தவ்ஹீத் ஜமாத் என்ற அமைப்பை தொடங்கினார் எஸ்.எம். பாக்கர்
எஸ் எம் பாக்கர் அவர்கள் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் இருதய நோயால் பாதிக்கப்பட்டு மீண்டார்
மேலும் கடந்த மாதம் நுரையீரலில் மீண்டும் நிமோனியா தொற்று ஏற்பட்டது. உடலை வருத்திக்கொண்டு சமுதாயப் பணிகளில் ஈடுபட்டதால், மீண்டும் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்தநிலையில் அவரது உடல்நிலை மோசமடைந்த நிலையில் நேற்று இரவு மரணமடைந்தார். அவரது மறைவிற்கு பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். எஸ்.எம்.பாக்கர் உடல் இன்று மாலை அஸர் தொழுகைக்கு பின்பு ராயப்பேட்டையில் அடக்கம் செய்யப்படவுள்ளது.
Tags: தமிழக செய்திகள் மார்க்க செய்தி
