குஜராத்தில் ஓடும் வேனில் இருந்து கீழே விழுந்த பள்ளி மாணவிகள் வீடியோ வைரல் Shocking video
ஓடும் வேனில் இருந்து கீழே விழுந்த பள்ளி மாணவிகள்- வீடியோ வைரல் Shocking video
மாணவிகளின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் வேன் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
குஜராத் மாநிலம் வதோதராவில் உள்ள மஞ்சல்பூரில் இந்த விபத்து சம்பவமானது ஏற்பட்டுள்ளது. இந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த வீடியோவில் ஒரு வெள்ளை நிற பள்ளி வேனானது ஒரு குறுகிய தெருவில் ரிவர்ஸ் சென்று உடனடியாக அதிவேகத்தில் முன்நோக்கி செல்கிறது. அதில் பின்பக்கமாக இரண்டு மாணவிகள் தங்கள் பள்ளி பேக்குடன் குச்சலிட்ட படி கீழே விழுகிறார்கள். டிரைவர் வேன் கதவை சரியாக மூடாததால், மாணவிகள் வெளியே விழுந்துள்ளனர். உடனடியாக அருகில் இருந்தவர்கள் அலறிய பள்ளி மாணவிகளை உடனடியாக உதவுகின்றனர்.
மாணவிகளின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் வேன் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.இந்நிலையில் மாணவிகளுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.
https://x.com/shashank_ssj/status/1804261530487443608
Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ
