Breaking News

பீகாரில் சுயேச்சையாக போட்டியிட்டு வென்ற பப்பு யாதவ் காங்கிரஸில் இணைந்தார் Pappu Yadav

அட்மின் மீடியா
0

பீகார் பூர்ணியாவில் சுயேச்சையாக போட்டியிட்டு வென்ற பப்பு யாதவ் மீண்டும் காங்கிரசில் இணைந்தார்!இதன் மூலம் இந்தியா கூட்டணி எம்பிக்களின் எண்ணிக்கை 235 ஆக உயர்ந்துள்ளது.

 


பிகார் மாநிலம் பூர்ணியா தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டு வென்ற பப்பு யாதவ், மீண்டும் காங்கிரஸில் இணைந்து பணியாற்ற விரும்புவதாக விருப்பம் தெரிவித்துள்ளார்.

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியையும் சந்தித்து தனது விருப்பத்தை அவர் தெரிவித்துள்ளார். இதன் மூலம் காங்கிரஸ் எம்.பி.க்களின் எண்ணிக்கை 100லிருந்து 101ஆக அதிகரித்துள்ளது

பீகாரில் உள்ள பூர்னியா மக்களவைத் தொகுதியில் சுயேட்சையாகப் போட்டியிட்ட முன்னாள் எம்பி ராஜேஷ் ரஞ்சன் என்கிற பப்பு யாதவ் 23,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

Tags: அரசியல் செய்திகள் இந்திய செய்திகள்

Give Us Your Feedback