Breaking News

ஒடிசாவில் ஆட்சியமைக்கும் பாஜக? தேர்தல் வாக்கு எண்ணிக்கை முன்னிலை நிலவரம் odisha Election Results 2024

அட்மின் மீடியா
0

ஒடிசாவில் ஆட்சியமைக்கப்போவது யார்? தேர்தல் வாக்கு எண்ணிக்கை முன்னிலை நிலவரம் odisha Election Results 2024 ஒடிசாவில் உள்ள 147 தொகுதிகளில் ஆட்சியை பிடிக்க 74 இடங்கள் தேவை

ஒடிசா மாநிலத்தில் நான்கு கட்டங்களாக நடைபெற்ற சட்டப்பேரவை மற்றும் மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன. கடந்த 2019 தேர்தலில் பிஜு ஜனதா தளம் 112, பாஜக 23, காங்கிரஸ் 9 என வெற்றி பெற்றனர். 

இந்த தேர்தலில் பிஜு ஜனதா தளமும் பாஜகவும் தனித்து போட்டியிடுகின்றன. சிபிஎம் மற்றும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா உடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைத்துப் போட்டியிடுகிறது. இதன் காரணமாக ஒடிசாவில் மும்முனைப் போட்டி அமைந்துள்ளது

பாஜக - 64 இடங்களில் முன்னிலை

பிஜூ ஜனதா தளம் -44 இடங்களில் முன்னிலை

காங்கிரஸ் கட்சி    12 இடங்களில் முன்னிலை

தேர்தல் ஆணைய அதிகாரப்பூரவ அறிவிப்பு பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

https://results.eci.gov.in/AcResultGenJune2024/index.htm

Tags: அரசியல் செய்திகள்

Give Us Your Feedback