Breaking News

NCET, UGC NET தேர்வுகளுக்கான புதிய கால அட்டவணை வெளியிட்ட தேசிய தேர்வு முகமை

அட்மின் மீடியா
0

NCET, UGC NET தேர்வுகளுக்கான புதிய கால அட்டவணையை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது



தேசிய தேர்வு முகமையினால் நடத்தப்பட்டு ரத்து செய்யப்பட்ட யுஜிசி நெட் தேர்வு, ஒத்திவைக்கப்பட்ட சிஎஸ்ஐஆர் யுஜிசி நெட் தேர்வு மற்றும் என்சிஇடி தேர்வு ஆகியவற்றிக்கான புதிய தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய அட்டவணை

NCET 2024 தேர்வு ஜூலை 10 ஆம் தேதி நடைபெறவுள்ளது. 

சிஎஸ்ஐஆர் யுஜிசி நெட் (CSIR-UGC NET) தேர்வு ஜூலை 25 முதல் 27 ஆம் தேதி வரை நடைபெறும்.

ரத்து செய்யப்பட்ட யுஜிசி-நெட் ஜூன் (UGC-NET) 2024 தேர்வு ஆகஸ்ட் 21 ஆம் தேதி முதல் செப்டம்பர் 4 ஆம் தேதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த அனைத்து தேர்வுகளும் கணினி வழியில் நடைபெறும். ரத்து செய்யப்பட்ட யுஜிசி நெட் 2024 தேர்வு ஓஎம்ஆர் முறையில் நடைபெற்ற நிலையில், மறுதேர்வு கணினி வழியில் நடைபெறவுள்ளது. 

அகில இந்திய ஆயுஷ் முதுகலை நுழைவு தேர்வு (AIAPGET) முன்னதாக திட்டமிட்டப்படி ஜூலை 6, 2024 அன்று நடைபெறும் என புதிய கால அட்டவணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: இந்திய செய்திகள் கல்வி செய்திகள் தமிழக செய்திகள்

Give Us Your Feedback