உங்க IRCTC கணக்கில் வேறு நபர்களுக்கு டிக்கெட் புக் செய்தால் 3 ஆண்டு சிறை உண்மை என்ன முழு விவரம்
உங்க IRCTC கணக்கில் வேறு நபர்களுக்கு டிக்கெட் புக் செய்தால் 3 ஆண்டு சிறை முழு விவரம்
ஆன்லைன் மூலம் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது குடும்ப உறுப்பினர்கள் தவிர மற்ற நபர்களுக்கு டிக்கெட் முன்பதிவு செய்து வழங்க கூடாது என ரயில்வே நிர்வாகம் புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
இதை மீறுபவர்களுக்கு மூன்று ஆண்டு ஜெயில் தண்டனை மற்றும் ரூபாய் 10,000 வரை அபராதம் விதிக்கவும் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது உங்கள் தனிப்பட்ட ரயில் கணக்கை பயன்படுத்தி தனி நபர் ஒருவர், ரத்த உறவுகள் அல்லது குடும்பப் பெயரைக் கொண்டவர்களுக்கு மட்டுமே டிக்கெட்டுகளை முன் பதிவு செய்ய முடியும். நண்பர்கள் அல்லது பிறருக்காக முன்பதிவு செய்தால் ஜெயில் தண்டனையுடன் அபராதமும் கிடைக்கும் என புதிய விதிகள் அமலுக்கு வந்துள்ளது.
ரயில்வே சட்டம் 143வது பிரிவின் படி மூன்றாம் நபர்களுக்கு முன்பதிவு செய்ய அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்ட முகர்வோர்களுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. இந்த விதியை மீறினால் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது என செய்தி பரவியது
உண்மை என்ன:-
இந்த தகவல் குறித்து இந்திய ரயில்வே வாரியம் வெளிட்டுள்ள செய்தி குறிப்பில்:
அதாவது அதிகாரப்பூர்வ ரயில்வே ஏஜென்ட்டாக (Agent) இல்லாத எவரேனும், ரயில்வே கணக்கில் தனிப்பட்ட ஐடியில் ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு செய்து, பயணம் செய்வதற்கான டிக்கெட்டுகளை பணத்திற்காக விற்பனை செய்யும் தொழிலை மேற்கொண்டால்
அவர்கள் மீது 1989 இந்திய ரயில்வே சட்டம் 143 பிரிவு படி, மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது ரூ. 10,000 அபராதம் விதிக்கப்டும் என்று IRCTC கூறியுள்ளது.
மேலும் அதில் தனிப்பட்ட கணக்கில் தங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கும், நண்பர்களுக்கும் டிக்கெட் முன்பதிவு செய்யக்கூடாது என தெரிவிக்கவில்லை.
தனது டிவிட்டர் பக்கத்தில்:-
The news in circulation on social media about restrictions in booking of e-tickets due to different surnames is false and misleading. The concerned should be discouraged from spreading such false news.It is clarified that tickets from IRCTC site are being booked as per Railway Board Guidelines and required information is available on the public domain as under:
1. One can book tickets on personal User ID for friends, family, and relatives.
2. Booking can be done for up to 12 tickets per month which in case of Aadhaar-authenticated users can go up to 24 tickets per month, if one of the passengers on a ticket is also aadhar authenticated.
3. Tickets booked on personal User IDs are not meant for commercial sale and such an act is an offense under section 143 of Railways Act 1989.
தமிழ் விளக்கம்:-
வெவ்வேறு குடும்பப்பெயர்களால் இ-டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதில் கட்டுப்பாடுகள் இருப்பதாக சமூக ஊடகங்களில் பரவி வரும் செய்திகள் தவறானவை மற்றும் தவறானவை.
இது போன்ற தவறான செய்திகளைப் பரப்புவதில் இருந்து சம்பந்தப்பட்டவர்களைத் தடுக்க வேண்டும்.
ரயில்வே வாரிய வழிகாட்டுதல்களின்படி ஐஆர்சிடிசி தளத்தில் இருந்து டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்படுவதாகவும், தேவையான தகவல்கள் கீழே உள்ள பொதுக் களத்தில் உள்ளன என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது:
1. நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கான தனிப்பட்ட பயனர் ஐடியில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம்.
2. ஒரு மாதத்திற்கு 12 டிக்கெட்டுகளுக்கு முன்பதிவு செய்யலாம், இது ஆதார்-அங்கீகரிக்கப்பட்ட பயனர்கள் ஒரு மாதத்திற்கு 24 டிக்கெட்டுகள் வரை செல்லலாம், ஒரு டிக்கெட்டில் உள்ள பயணிகளில் ஒருவரும் ஆதார் அங்கீகரிக்கப்பட்டிருந்தால்.
3. தனிப்பட்ட பயனர் ஐடிகளில் முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகள் வணிக ரீதியான விற்பனைக்கானவை அல்ல மேலும் இது போன்ற செயல் ரயில்வே சட்டம் 1989 இன் பிரிவு 143 இன் கீழ் குற்றமாகும்.
இந்திய ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பு பார்க்க இங்கு கிளிக் செய்யவும்
https://x.com/IRCTCofficial/status/1805567775387091240
Tags: முக்கிய அறிவிப்பு முக்கிய செய்தி

