முஸ்லீம் ஆணுக்கும் இந்து பெண்ணுக்கும் இடையிலான திருமணம் ரிஜிஸ்டர் பதிவு செய்திருந்தாலும் செல்லாது உயர் நீதிமன்றம் Hindu-Muslim Marriage Under Special Marriage Act Invalid Under Muslim Law
முஸ்லிம் ஆணுக்கும், இந்து பெண்ணுக்கும் இடையிலான திருமணம் முஸ்லிம் தனிநபர் சட்டத்தின் கீழ் செல்லாது என மத்திய பிரதேச உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சிறப்பு திருமணச் சட்டம் 1954ன் கீழ் மதங்களுக்கு இடையேயான திருமணத்தை பதிவு செய்ய போலீஸ் பாதுகாப்பு கோரிய மனுவையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
முஸ்லீம் ஆணுக்கும் இந்து பெண்ணுக்கும் இடையிலான திருமணம் முஸ்லீம் சட்டத்தின் கீழ் “ஒழுங்கற்ற” திருமணமாக கருதப்படும் என்று நீதிபதி குர்பால் சிங் அலுவாலியா தீர்ப்பளித்துள்ளார் மேலும் அவர்கள் சிறப்பு திருமணச் சட்டத்தின் கீழ் திருமணம் செய்திருந்தாலும் கூட, அது செல்லாது என கூறப்பட்டுள்ளது
இஸ்லாமிய மதத்தை சேர்ந்த ஆணை இந்து மதத்தை சேர்ந்த பெண் திருமணம் செய்து கொள்வது முஸ்லிம் சட்டத்தின் கீழ் செல்லாது என மத்திய பிரதேச உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சிறப்பு திருமண சட்டம், 1954 இன் கீழ் தங்களின் கலப்பு திருமணத்தை பதிவு செய்து போலீஸ் பாதுகாப்பு வழங்க தம்பதியர் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். ஆனால் அந்த மனுவை ஏற்க மறுத்து தள்ளுபடி செய்த நீதிமன்றம், இவ்வாறு கருத்து கூறியுள்ளது
இஸ்லாமிய மதத்தை சேர்ந்த ஆணும் இந்து மதத்தை சேர்ந்த பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். ஆனால், அவர்களின் காதலை பெண்ணின் குடும்பத்தினர் எதிர்த்துள்ளனர். இந்த நிலையில், சிறப்பு திருமண சட்டத்தின் கீழ் திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகவும் தங்களுக்கு பாதுகாப்பு அளிக்கக் கோரியும் ம.பி. உயர் நீதிமன்றத்தில் தம்பதி மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி குர்பால் சிங் அலுவாலியா, "முஸ்லீம் தனிச் சட்டத்தின் கீழ் நெருப்பை வழிபடும் பெண்ணுக்கும் முஸ்லீம் ஆணுக்கும் நடக்கும் திருமணம் செல்லாது. அவர்கள் சிறப்புத் திருமணச் சட்டத்தின் கீழ் திருமணம் செய்திருந்தாலும், முஸ்லீம் தனிச் சட்டத்தின் கீழ் அது ஒழுங்கற்ற திருமணமாக கருதப்படும்.
மத சடங்குகள் நடைபெறாத காரணத்தால் கலப்பு திருமணத்திற்கு (inter-faith marriage) எதிராக வழக்கு தொடர முடியாது என்றாலும் தனிச் சட்டத்தின் கீழ் தடை செய்யப்பட்டால் இம்மாதிரியான திருமணங்கள் சட்டப்பூர்வ திருமணமாக கருத முடியாது" என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்
Tags: இந்திய செய்திகள் மார்க்க செய்திகள்
