Breaking News

FACT CHECK மொபைல் எண்களுக்கு தனி கட்டணம் என பரவும் செய்தி உண்மை என்ன முழு விவரம்

அட்மின் மீடியா
0

FACT CHECK மொபைல் எண்களுக்கு தனி கட்டணம் என பரவும் செய்தி உண்மை என்ன முழு விவரம்

பரவி வரும் செய்தி:-

கடந்த ஆண்டு டிசம்பரில் நிறைவேற்றப்பட்ட புதிய தொலைத்தொடர்பு சட்டத்தின் கீழ், பொதுமக்கள் பயன்படுத்தும் மொபைல் எண்களுக்கு கட்டணம் வசூலிக்க மத்திய தொலைத் தொடர்பு ஒழுங்கு முறை ஆணையமான டிராய் பரிசீலித்து வருகிறது. இந்த கட்டணம் தொலைதொடர்பு நிறுவனங்கள் மீது விதிக்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளது.

அந்நிறுவனங்கள் வாடிக்கையாளர்களிடம் இந்த கட்டணத்தை வசூலித்து கொள்வார்கள். இதற்காக ஒரு முறை கட்டணம் அல்லது வருடாந்திர கட்டணம் அல்லது பிரீமியம் எண்களுக்கு ஏலம் விடுவது போன்ற முறைகளை டிராய் ஆய்வு செய்து வருகிறது.

எண்களுக்கு கட்டணம் விதிக்கும் நடைமுறை ஏற்கனவே ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், பெல்ஜியம், பின்லாந்து, இங்கிலாந்து, லிதுவேனியா, கிரீஸ், ஹாங்காங், பல்கேரியா, குவைத், நெதர்லாந்து, சுவிட்சர்லாந்து, போலந்து, நைஜீரியா, தென் ஆப்ரிக்கா மற்றும் டென்மார்க் போன்ற நாடுகளில் அமலில் உள்ளது.

உண்மை என்ன 

மொபைல் எண்களுக்கு தனி கட்டணம் வசூலிக்க, இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம்  பரிந்துரைத்துள்ளதாக வெளியான செய்தி வதந்தி எனவும் யாரும் நம்பவேண்டாம் எனவும் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் டிராய் மறுத்துள்ளது.

மேலும் இத்தகைய செய்திகள் ஆதாரமற்றவை என்றும், இதுபோன்ற செய்திகள் மக்களைத் தவறாக வழிநடத்துவதாக டிராய் கூறியுள்ளது.

இது குறித்து டிராய் தனது டிவிட்டர் பக்கத்தில்

The speculation that TRAI intends to impose charges on customers for holding multiple SIMs/ numbering resources is unequivocally false. Such claims are unfounded and serve only to mislead the public.

அட்மின் மீடியா ஆதாரம் பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

https://x.com/TRAI/status/1801538202567852224

Tags: மறுப்பு செய்தி FACT CHECK

Give Us Your Feedback