Breaking News

அமித்ஷா கண்டித்ததாக வெளியான செய்தி - தமிழிசை சவுந்தராராஜன் விளக்கம்..! முழு விவரம்

அட்மின் மீடியா
0

அமித்ஷா கண்டித்ததாக வெளியான செய்தி - தமிழிசை சவுந்தராராஜன் விளக்கம்..! முழு விவரம்

தமிழக பாஜகவின் முன்னாள் தலைவராக இருந்த தமிழிசை சௌந்தரராஜன் பின்பு புதுச்சேரி மற்றும் தெலுங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார். 

இந்நிலையில் தனது ஆளுநர் பதவியை ராஜினாமா செய்த தமிழிசை நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக சார்பாக மத்திய சென்னை தொகுதியில் வேட்பாளராகப் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.

ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ஜே.பி.நட்டா, தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். அப்போது மேடையில் தமிழிசை அமித்ஷாவுக்கு வணக்கும் சொல்லிவிட்டுச் செல்லும்போது, அமித்ஷா உடனே அவரை அழைத்து கடுமையாகக் கண்டிக்கிறார். 

பதிலுக்குத் தமிழிசை எதோ கூற வரும்போது தமிழிசை சவுந்தரராஜன் கூறுவதை ஏற்க மறுத்து தான் சொல்வதை கேட்குமாறு மத்திய அமைச்சர் அமித்ஷா பேசுவது போன்று உள்ளது.

தமிழகத்தில் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி தொடர்பாக மாநில தலைவர் அண்ணாமலைக்கும், தமிழிசை சவுந்தரராஜனுக்கும் ஏற்பட்ட கருத்து மோதல் இருந்த நிலையில், மத்திய மந்திரி அமித் ஷா மேடையில் வைத்தே தமிழிசை சவுந்தரராஜனிடம் கடுமையாக பேசிய சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

இது தொடர்பாக அவர் தனது டிவிட்டர் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்:-

நேற்று ஆந்திராவில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு முதன்முறையாக சந்தித்தேன். அப்போது அவர் மக்களவைத் தேர்தலில் சந்தித்த சவால்கள் குறித்தும் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்தும் கேட்டறிந்தார்.அதை நான் விவரித்துக்கொண்டிருக்கும்போது, நேரமின்மையால், மிகுந்த அக்கறையுடன் அரசியல் மற்றும் தொகுதி பணிகளை தீவிரமாக மேற்கொள்ளுமாறு அவர் அறிவுரை வழங்கினார். தேவையற்ற வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவே இந்த விளக்கம்” என பதிவிட்டுள்ளார்.

டிவிட்டர் பதிவு பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-

https://x.com/DrTamilisai4BJP/status/1801277643960246451

Tags: அரசியல் செய்திகள்

Give Us Your Feedback