பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் விடுதிகளில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்
பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் விடுதிகளில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்
மாவட்டத்தில் உள்ள பிற்படுத்தப் பட்டோர், மிகபிற்படுத்தப்பட் டோர் மற்றும் சிறுபான்மையி னர் விடுதிகளில் மாணவர் மற்றும் மாணவியர் சேர்க்கைக்காக விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு அ.அனுசுயாதேவி தெரிவித்துள் ளார்.
இது குறித்து அவர் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
சென்னை மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகபிற்படுத்தப் பட்டோர் மற்றும் சிறுபான்மை யினர் மாணவர் மற்றும் மாணவியருக்கென மொத்தம் 17 விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. இதில் 11 மாணவர் விடுதிகளும், 6 மாணவியர் விடுதிகளும் உள்ளன.
இந்நிலையில் பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்பு மற்றும் பாலி டெக்னிக் படிப்புகளில் பயிலும் மாணவ மாணவியர் இந்த விடுதியில் சேரத் தகுதியுடையவர்கள் ஆவர். மேலும் விடுதியில் மாணவ ), மாணவியருக்கு இலவச உணவு மற்றும் தங்கும் வசதி அளிக்கப்படும்.
இதனிடையே விடுதியில் சேரும் மாணவ, மாணவியரின் பெற்றோர் அல்லது பாதுகாவலரது ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். இருப்பிடத் திலிருந்து பயிலும் கல்வி நிலையத்தின் தொலைவு குறைந்தபட்சம் 8 கி.மீக்கு மேல் இருக்க வேண்டும். இந்த தொலைவு விதி மாணவிய ருக்கு பொருந்தாது.
மேலும் தகுதியுடைய மாணவ, மாணவியர்கள் விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட விடுதிகாப்பாளர்களிடமிருந்தோ அல்லது மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலஅலுவலகத்தில் இருந்தோ இலவசமாக பெற்றுக் கொள்ளலாம்.
அவற்றை பூர்த்தி செய்து வரும் ஜூலை 15- ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் மாணவ, மாணவியர் விடுதியில் சேரும் போது ஜாதி மற்றும் பெற்றோரது ஆண்டு வருமானம் குறித்த சான்றி தழ்களை அளிக்க வேண்டும்.
எனவே மாணவ, மாணவியர் அரசின் இச்சலுகைகளை பெற்று பயனடைய வேண்டும் என அதில் தெரி விக்கப்பட்டுள்ளது.
Tags: தமிழக செய்திகள் முக்கிய செய்தி
