வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட காட்டு யானை போராடி கரை சேர்ந்த வீடியோ
வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட காட்டு யானை போராடி கரை சேர்ந்த வீடியோ
ஓவேலி ஆற்றை கடக்க முயன்றபோது யானை ஒன்று நீரில் அடித்து செல்லப்பட்ட காட்சி வேகமாக சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அதிர்ஷ்டவசமாக அந்த யானை தண்ணீரில் இருந்து தப்பித்து மீண்டும் காட்டுக்குள் சென்றது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் தர்மகிரி பகுதியில் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட காட்டு யானை போராடி கரையை கடந்த காட்சி
நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டி வருகிறது. இந்நிலையில், கூடலூர் தர்மகிரி பகுதியில் பாய்ந்து சென்ற காட்டாற்று வெள்ளத்தை கடக்க முயன்ற யானை ஆற்று நீரில் வேகமாக அடித்து செல்லப்படது இதனால் யானை சில நொடிகள் நீருக்குள்ளும் மூழ்கியது.
நீருக்குள் இருந்து மீண்டு வந்த யானைக்குட்டி, தட்டு தடுமாறி கடும் முயற்சிக்குப் பிறகு கரையை நெருங்கிய யானைக்குட்டி, கரைக்கு ஏறியதுமே அங்கிருந்து காட்டுக்குள் வேகமாக ஓட்டம்பிடித்தது.
இதுதொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்
https://x.com/Srinietv2/status/1806557695002251723
Tags: தமிழக செய்திகள் வைரல் வீடியோ
