அமேசான் பார்சலில் வந்த நாகப் பாம்பு வைரலாகும் வீடியோ
பெங்களூரு சர்ஜாபூரை சேர்ந்த ஐ.டி. தம்பதியர், அமேசான் தளத்தில் எக்ஸ்பாக்ஸ் கன்ட்ரோலரை ஆர்டர் செய்துள்ளனர். நேற்று மாலை அவர்களுக்கு இந்த பேக்கேஜ் டெலிவரி செய்யப்பட்டிருந்தது. அதை பிரித்த போது அதில் நாகப்பாம்பு இருந்துள்ளது.
சர்ஜாபூர் சாலையில் வசித்து வரும் தம்பதி எக்ஸ்பாக்ஸ் கன்ட்ரோலர் அமேசான் ஆர்டரில் நாகப்பாம்பு இருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிர்ஷ்டவசமாக பேக்கேஜிங் டேப்பில் சிக்கி இருந்ததால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை இதைப் பார்த்து முதலில் பதறிய அவர்கள், பின்னர் அதனை வீடியோ பதிவு செய்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளனர்.
இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து அந்த பாம்பை அவர்கள் பிடித்து சென்றனர்.அந்த வீடியோ வைரலான நிலையில், அமேசான் நிறுவனம் அந்த வாடிக்கையாளருக்கு பதில் தந்துள்ளது. "சிரமத்துக்கு வருந்துகிறோம். நாங்கள் அதை சரி பார்த்திருக்க வேண்டும். ஆர்டர் குறித்த விவரத்தை இந்த லிங்கில் பதிவேற்றவும். அப்டேட் உடன் எங்கள் குழு உங்களை தொடர்பு கொள்ளும்" என அமேசான் தெரிவித்துள்ளது.
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்
https://x.com/Prakash20202021/status/1803230562087297166
Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ
