Breaking News

கள்ளச்சாராய மரணம் எதிரொலி மருந்து கடைகளுக்கு கட்டுப்பாடு விதிப்பு..!

அட்மின் மீடியா
0

கள்ளகுறிச்சி கள்ளச்சாராயம் மரணம் எதிரொலியாக ஆல்கஹாலின் மூலப் பொருட்களாக இருக்கும் மருந்து பொருட்களை விற்பனை செய்ய தமிழகத்தில் உள்ள மருந்து கடைகளுக்கு தமிழ்நாடு மருந்து விற்பனையாளர்கள் சங்கம் கட்டுப்பாடுகள் விதித்துள்ளது.



கள்ளக்குறிச்சி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப்பகுதிகளில் மெத்தனால் கலந்த விஷ சாராயத்தை அருந்தி 52 பேர் இறந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.இந்நிலையில் கள்ளச்சாராய மரணம் எதிரொலியாக மருந்து கடைகளில் சானிடைசர் வாங்க செல்வோர் அடையாள அட்டையை காண்பிக்க வேண்டும் என்று மருந்து கடைகளுக்கு தமிழ்நாடு மருந்து விற்பனையாளர்கள் சங்கம் அறிவுறுத்தி உள்ளது.

இந்நிலையில் மருந்து கடைகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. சானிடைசர் வங்க அடையாள அட்டை கட்டாயம் என்று தமிழ்நாடு மருத்து விற்பனையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

தமிழ்நாடு மருந்து விற்பனையாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சானிடைசர் வாங்க அடையாள அட்டை கட்டாயம். கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் சம்பவத்தை தொடர்ந்து மருந்து கடைகளில் சில பொருட்களை வாங்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. விதிகளை மீறி தனி நபர்களுக்கு அதிகளவு சானிடைசர் விற்கும் மருந்துக் கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஆல்கஹால், எத்தனாலை மூலப்பொருளாகக் கொண்ட ஸ்பிரிட், சானிடைசர், ஹேண்ட் வாஸ் ஆகியவற்றை முறைப்படி விற்க வேண்டும் என தமிழ்நாட்டில் உள்ள 37,000 மருந்து கடைகளுக்கும் தமிழ்நாடு மருந்து விற்பனையாளர்கள் சங்கம் அறிவுறுத்தியுள்ளது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback