புரட்சி பாரதம் கட்சியில் இருந்து விலகி புதிய புரட்சி கழகம் என்ற கட்சியை தொடங்கிய மாவட்ட தலைவர் ஓதியூர் சங்கர்
புரட்சி பாரதம் கட்சியில் இருந்து விலகி புதிய புரட்சி கழகம் என்ற கட்சியை தொடங்கிய மாவட்ட செயலாளர் ஓதியூர் சங்கர்
பூவை ஜெகன் மூர்த்தியின் புரட்சி பாரதம் கட்சியின் காஞ்சி மாவட்ட தலைவராக இருந்த ஓதியூர் சங்கர், இன்று அக்கட்சியில் இருந்து விலகி ‘புதிய புரட்சி கழகம்’ என்ற கட்சியை தொடங்கினார்
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பூவை ஜெகன் மூர்த்தியின் புரட்சி பாரதம் கட்சி ஆதரவளித்திருந்த அதிமுக தோல்வியடைந்திருந்தது.
இந்நிலையில், அக்கட்சியின் காஞ்சி மாவட்ட தலைவராக இருந்த ஓதியூர் சங்கர், இன்று அக்கட்சியில் இருந்து விலகி 'புதிய புரட்சி கழகம்' என்ற கட்சியை தொடங்கியுள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம்,அச்சரப்பாக்கம் பேரூராட்சிக்குட்பட்ட மலை நகர் பகுதியில் உள்ள தாத்தா ரெட்டை மலை சீனிவாசன் மணி மண்டபத்தில் O.E. சங்கர், புதியபுரட்சிக் கழகம் என்ற கட்சியை தொடங்கினார்.
புதிய கட்சி தொடங்கிய கட்சியின் நிறுவனத் தலைவர் OE சங்கருக்கு விடுதலை சிறுத்தை கட்சியின் மண்டல செயலாளர் சூ.க. ஆதவன், மாவட்ட செயலாளர் தமிழினி ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.
புதிய புரட்சிக் கழகம் என்ற கட்சியை தொடங்கியுள்ள O.E. சங்கர்,புரட்சி பாரதம் கட்சியின் செங்கல்பட்டு தெற்கு மாவட்ட தலைவராக பொறுப்பில் இருந்தவர்.புரட்சி பாரதம் கட்சியை விட்டு விலகி வந்து தனது ஆதரவாளர்களுடன்புதிய புரட்சி கழகம் என்ற கட்சியை தொடங்கியுள்ளார். இந்த கட்சியின் தொடக்க விழாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
Tags: அரசியல் செய்திகள்
